அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
'கடாரம் கொண்டான்' படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விக்ரம். பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர்.
'கோப்ரா' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 28) மாலை 5 மணியளவில் இணையத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இதில் 7 கெட்டப்களில் விக்ரம் இருப்பது போன்று படக்குழு வடிவமைத்துள்ளது. அதில் அனைத்திலுமே விக்ரம் வெவ்வேறு கெட்டப்களில் இடம்பெற்றுள்ளார்.
விக்ரம் முழுமையாகத் தனது உடலமைப்பை மாற்றி, இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் 15 கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்தவுடன், இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இதில் நடித்துக்கொண்டே மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் விக்ரம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago