விக்ரம் சுகுமாரன் - தினேஷ் இணையும் தேரும் போரும்

By செய்திப்பிரிவு

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கவுள்ள படத்துக்கு 'தேரும் போரும்' எனத் தலைப்பிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகப் பேசப்பட்டவர் விக்ரம் சுகுமாரன். அதற்குப் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து சாந்தனு நாயகனாக நடிக்கும் 'ராவணக் கோட்டம்' படத்தைத் தொடங்கினார். தற்போது 'மாஸ்டர்' படத்தில் சாந்தனு மும்மரமாகிவிட்டதால், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் விக்ரம் சுகுமாரன்.

தினேஷ் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'தேரும் போரும்' எனத் தலைப்பிட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார், கலை இயக்குநராக ராஜீவன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஐஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை ஏகாதசி எழுதியுள்ளார். பாடல் பதிவும் முடிந்தது.

தற்போது தினேஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்