பா.இரஞ்சித் படத்துக்காக உடலமைப்பை முழுமையாக மாற்றியமைத்து ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'காலா' படத்தைத் தொடர்ந்து இந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாக இருந்த 'பிர்சா முண்டா' படத்தின் பணிகளைத் தொடங்கினார் பா.இரஞ்சித். ஆனால், அந்தப் படம் பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித்.
இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இதுவரை இந்தப் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்புமே வெளியாகவில்லை.
முதன்முறையாக இன்று (பிப்ரவரி 20) மாலை 5 மணிக்கு, பா.இரஞ்சித் - ஆர்யா படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. பாக்ஸிங் வீரராக நடிப்பதற்கு ஆர்யா முழுமையாக தன் உடலமைப்பை மாற்றியமைத்தார். ஏற்கெனவே உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் ஆர்யா, இந்தப் படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்து நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பு மாற்றத்தை, புகைப்படமாக தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. இதற்கு ஆர்யாவின் நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலருமே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த லுக் ட்விட்டர் தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தவறவிடாதீர்!
சர்ச்சைக்குக் கிண்டலாகப் பதிலடி கொடுத்த 'கர்ணன்' இயக்குநர்
பாலின பேதத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன்: டாப்ஸி வெளிப்படை
’இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் பலி; திரையுலக பிரபலங்கள் இரங்கல்
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago