’கைதி’ இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன்?

By செய்திப்பிரிவு

'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஹ்ரித்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவோ தங்களுடைய நிறுவனமே அனைத்து மொழிகளிலும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது. முதலில் இந்தி மொழி ரீமேக்கை அறிவித்துள்ளது படக்குழு.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்திப் பட தயாரிப்பில் களமிறங்குகிறது. பல முன்னணி இந்தி நடிகர்களும் 'கைதி' படத்தைப் பார்த்து இதில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், ஹ்ரித்திக் ரோஷன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, அவரிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது படக்குழு.

சம்பளம், படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே முடிவானவுடன் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி ரீமேக் யார் இயக்கவுள்ளார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

தவறவிடாதீர்

3 பாகங்களாக உருவாகிறது ‘சத்ரபதி சிவாஜி’: ‘சாய்ராட்’ இயக்குநர் அறிவிப்பு

'முகவரி' வெளியாகி 20 ஆண்டுகள்: பி.சி.ஸ்ரீராம் நெகிழ்ச்சி

'திரெளபதி' தணிக்கையில் நடந்தது என்ன? - இயக்குநர் மோகன்.ஜி விளக்கம்

தனுஷ்- கார்த்திக் சுப்புராஜ் இணைந்த ஜகமே தந்திரம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்