கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு 'ஜகமே தந்திரம்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'அசுரன்' படம் வெளியாகும் முன்பே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே சுமார் 90% காட்சிகளைப் படமாக்கிவிட்டு இந்தியா திரும்பியது படக்குழு.
ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் ஆகியவற்றில் சில காட்சிகளைப் படமாக்கி முடித்துவிட்டு, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக அறிவித்தது படக்குழு. இதனிடையே இன்று (பிப்ரவரி 19) 'தனுஷ் 40' படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
அதன்படி, இந்தப் படத்துக்கு 'ஜகமே தந்திரம்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
மேலும், லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிவித்துள்ளது படக்குழு.
தவறவிடாதீர்!
தலைவா ஆன் டிஸ்கவரி.. மோஷன் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டிய பியர் கிரில்ஸ்
அஜித் காயம்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் #GetWellSoonThala
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
9 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago