முடிவடைந்தது தணிக்கைப் பணிகள்: 'திரெளபதி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'திரெளபதி' படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு, வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அன்று முதலே இணையத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் இந்தப் படம் உண்டாக்கி வருகிறது. இந்தப் படம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

ட்ரெய்லர் மூலமாக பெரும் விவாதத்தை உண்டாக்கிய இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டது. தற்போது இந்தப் படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டது. 'திரெளபதி' படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தவறவிடாதீர்

காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்: சதீஷை கலாய்த்த ஹர்பஜன் சிங்

அருண் விஜய்யின் வெற்றிக்குக் காரணம்: ப்ரியா பவானி சங்கர்

’தள்ளிப் போகாதே’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாஜகவில் இணைந்ததன் பின்னணி: இயக்குநர் பேரரசு வெளிப்படை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்