கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் படத்துக்கு 'தள்ளிப் போகாதே' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'பூமராங்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வந்தார் ஆர்.கண்ணன். இது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் ரீமேக்காகும். இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அமிதாஷ் அமிதாஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.
மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரித்தும் வருகிறார் இயக்குநர் கண்ணன். இதனிடையே, சந்தானம் படத்தைத் தொடங்கியதால் அதர்வா படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்தார். தற்போது சந்தானம் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, மீண்டும் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் கண்ணன்.
தற்போது அதர்வா படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 'தள்ளிப் போகாதே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
'தள்ளிப் போகாதே' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரே சமயத்தில் இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபடவுள்ளார் இயக்குநர் கண்ணன்.
தவறவிடாதீர்
பாஜகவில் இணைந்ததன் பின்னணி: இயக்குநர் பேரரசு வெளிப்படை
தணிக்கைக் குழு எதிர்ப்பு: தலைப்பை மாற்றிய படக்குழு
அப்பா இயக்கத்தில் நடித்தபோது ஏற்பட்ட குழப்பம், பதற்றம்: கல்யாணி ப்ரியதர்ஷன்
என் பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எரிச்சலைத் தருகிறது: ஏ.ஆர். ரஹ்மான் விமர்சனம்
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago