'தளபதி 65' படத்தை இயக்குவீர்களா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
'மாஸ்டர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடு என்பதில் உறுதியாக இருக்கும் இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கால்ஷீட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார் விஜய். இதற்காகக் கதைகள் கேட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் சுதா கொங்கரா, பாண்டிராஜ் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.
இதனிடையே "தளபதி 65 படத்தில் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் செம மாஸ்" என்று ட்விட்டர் தளத்தில் ரசிகர் ஒருவர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன், "மாஸுக்கு மாஸ்டர்-ஐ பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனைப் பிடிக்கும். ('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்- 'அழகிய தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்). நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!" என்று பதிலளித்துள்ளார் பார்த்திபன்.
தவறவிடாதீர்!
'நெற்றிக்கண்' ரீமேக் சர்ச்சை: கவிதாலயா நிறுவனம் விளக்கம்
இயக்குநர் ராஜ் கபூரின் மகன் திடீர் மரணம்
குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்ற மீண்டும் நடிக்கிறேன்: பவன் கல்யாண்
நீ ஒரு கண்ணியமான ஆணாக வளர்வாய்: சிறுவனின் செயலால் நெகிழ்ந்த டிடி
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago