விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது நிதினுக்கு நாயகியாக 'பீஷ்மா', சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதில் 'பீஷ்மா' திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்துக்கு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, 'பீஷ்மா' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கலந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா. அவரிடம் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, தனக்கு சிறுவயதிலிருந்தே விஜய் மீது பெரிய ஈர்ப்பு உள்ளதாகவும் அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
மேலும், 'மாஸ்டர்' படத்துக்குக் கூட இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், படப்பிடிப்பு தேதிகள் சரிவர அமையாததால் இவரால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்
வருமான வரித்துறையைக் கலாய்த்த பாக்யராஜ்
நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பதை பார்வையாளர்கள் நினைக்க வேண்டும்: ஆயுஷ்மான் குரானா
ஆஸ்கர் விருது எதிரொலி: ‘பாரசைட்’ டிக்கெட் விற்பனை 234 மடங்கு உயர்வு
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago