விரைவில் இயக்குநர்: விவேக் திட்டம்

By செய்திப்பிரிவு

படம் இயக்குவதற்காகக் கதை எழுதும் பணியை மேற்கொண்டு வருகிறார் விவேக்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக். காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

கமலுடன் மட்டுமே நடிக்காமல் இருந்தார். அதுவும் தற்போது கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதனிடையே, நீண்ட நாட்களாக தனக்குத் திரையுலகில் கிடைத்த அனுபவத்தின் மூலம் இயக்குநராக முடிவு செய்துள்ளார் விவேக்.

தற்போது தனது நெருங்கிய நண்பர்களுடன் கதை தொடர்பான விவாதம் உள்ளிட்டவற்றை விவேக் மேற்கொண்டு வருகிறார். விரைவில் முன்னணி நடிகரை இவர் இயக்கும் அறிவிப்பு வெளியாகும் என இவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இவர் நடிகராக இருப்பது மட்டுமன்றி, சமூகப் பணிகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தீவிர விஸ்வாசி விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்

'டாக்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திரை விமர்சனம்- ஓ மை கடவுளே

சீண்டிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்: ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் சாடல்

'பாராசைட்' படத்தின் கதைக்காக வழக்கு: 'தமிழ் படம்' இயக்குநர் மறைமுக கிண்டல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்