'ஜெயில்' வெளியீடு தாமதம்: இயக்குநர் வசந்தபாலன் அதிருப்தி

By செய்திப்பிரிவு

'ஜெயில்' வெளியீடு தாமதமாகி வருவதால், இயக்குநர் வசந்தபாலன் அதிருப்தியில் உள்ளார்.

'காவியத்தலைவன்' படத்துக்குப் பிறகு, 'ஜெயில்' படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய படம், சில சிக்கல்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

ஜி.வி.பிரகாஷ், ராதிகா சரத்குமார், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜெயில்' படத்தை ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இன்னும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கணும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னி சட்டியோட கயித்துல நடக்கணும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம். ஆனா, எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

ஆஸ்கர் விருது பெற்ற 'பாரசைட்' விஜய் படத்தின் நகல்; நாங்கள் வழக்குத் தொடுப்போம்: தயாரிப்பாளர் தேனப்பன் தகவல்

அளப்பரிய காதல், அன்பு: நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பகிர்வு

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் கை கோத்த சிவகார்த்திகேயன்

'பஹிரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்