த்ரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’, பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு, இன்று (பிப்ரவரி 14) சில திரையரங்குகளில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது. ரேடியோ சிட்டி பண்பலையில் ‘96’ படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பப்பட உள்ளது. இந்த இரண்டு படங்களிலுமே த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், த்ரிஷா நடிப்பில் படம் வெளியாகி ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி ஜோடியாக நடித்தார் த்ரிஷா. ரஜினிக்கு ஜோடி என்றாலும், கிட்டத்தட்ட கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் போலத்தான் அவரது கதாபாத்திரம் இருந்தது.
எனவே, 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ படத்தைத்தான் த்ரிஷாவின் கடைசிப் படமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்னும் ஜானுவாக த்ரிஷாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் காதலர்கள்.
இந்நிலையில், த்ரிஷா நடிப்பில் பல நாட்களாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படம், வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.
நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி ஜோடியாக அவர் நடிக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்டக் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
21 hours ago