தேசிய விருது வாங்கினால் நல்ல படம் எனச் சொல்ல முடியாது: ராம்

By செய்திப்பிரிவு

தேசிய விருது வாங்கினால் நல்ல படம் எனச் சொல்ல முடியாது என்று 'பாரம்' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராம் பேசினார்.

ப்ரியா கிருஷ்ணாசுவாமி இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியாகவுள்ள படம் 'பாரம்'. இது 66-வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினை வென்றது. இந்தப் படத்தைத் தமிழகத்தில் இயக்குநர் வெற்றிமாறன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், ராம், மிஷ்கின் உள்ளிட்டோர் படக்குழுவினருடன் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் ராம் பேசும் போது, "தேசிய விருது வாங்கினால் மட்டும் நல்ல படம் எனச் சொல்ல முடியாது. வாங்காவிட்டால் கெட்ட படமும் கிடையாது.

’பாரம்’ நல்ல படம். கோவா திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் இயக்குநரைச் சந்தித்த போது, படத்தைத் திரைக்குக் கொண்டு வாருங்கள் என்று கூறினேன். எப்படிக் கொண்டு வருவது எனத் தெரியாது என்றார். தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்றேன். திரைப்பட விழாக்களில் எப்படி படம் பார்ப்பார்களோ, அதே போல் தான் தமிழகத்தில் திரையரங்குகளில் படத்தைப் பார்ப்பார்கள். இங்குப் படத்தைக் கொண்டாடுவார்கள்.

’பாரம்’ படத்தை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தினேன். தற்போது அவர் வெளியிடுகிறார்கள். இந்த மாதிரியான நல்ல படம் வெற்றி பெற வேண்டியது அவசியம். தேடிப் போயாவாவது இந்தப் படத்தைப் பாருங்கள்” என்று பேசினார் இயக்குநர் ராம்.

தவறவிடாதீர்

யார் இந்த புதுக்கதையை எழுதியவர்? - வதந்திக்கு ஆர்த்தி கிண்டல்

சரியாகச் சொன்னீர்கள்: விஜய் சேதுபதிக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவுக் குரல்

நான் தெலுங்கு நடிகையா, தமிழ் நடிகையா என விவாதம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

அக்‌ஷய் குமாருக்குப் புகழாரம் சூட்டிய லாரன்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்