கவுண்டமணியை இயக்க விரும்பும் தனுஷ்

By செய்திப்பிரிவு

ஒரு படத்திலாவது கவுண்டமணியை இயக்க வேண்டும் என்பது தான் தனுஷின் நீண்ட நாள் ஆசை.

2017-ம் ஆண்டு 'ப.பாண்டி' என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

'ப.பாண்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ். அதில் ராஜ்கிரண் மற்றும் கவுண்டமனியை நடிக்க வைக்கலாம் என்பது தான் தனுஷ் ஆசையாக இருந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு இயக்குநர் ஆசையைத் தள்ளி வைத்திருக்கிறார் தனுஷ். தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, 'ப.பாண்டி 2' படத்தைக் கண்டிப்பாக இயக்குவார் என்று தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு, இந்திப் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். அதில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷுடன் நடிக்கவுள்ளனர்.

தவறவிடாதீர்

காலா, தர்பார் வழியில் சூர்யா படம்

விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியது 'மாஸ்டர்' படக்குழு

ராம் கோபால் வர்மாவை தாத்தா என்று அழைத்த ராஜமௌலி

விஜய்க்குப் பின்னால் எவ்வளவு பேர்: கருணாஸ் சூசகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்