விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியது 'மாஸ்டர்' படக்குழு

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் ஒன்று 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைக் காதலர் தினத்திலிருந்து தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

'ஒரு குட்டி கத..' என்ற முதல் பாடல் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர். ஏப்ரல் வெளியீடு என்றாலும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். மேலும், படத்தின் தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, இசை உரிமை என அனைத்துமே முதலிலேயே விற்பனையாகிவிட்டது.

'மாஸ்டர்' படத்துக்குப் போட்டியாக 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது 'சூரரைப் போற்று' படத்தின் முதல் பாடல் விமானத்தில் வெளியீடு, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குப் போட்டியாக 'மாஸ்டர்' படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

தவறவிடாதீர்!

விஜய்க்குப் பின்னால் எவ்வளவு பேர்: கருணாஸ் சூசகம்

மாணவர்களுக்கு அரசியல் தெரியாது என ரஜினி நினைப்பது வேதனை: அமீர்

'வலிமை' அப்டேட்: ஜீ ஸ்டுடியோஸ் வெளியேற்றம்?

வருமானவரித் துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்? - நுங்கம்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்