விஜய் வெளியிட்ட ஒரு செல்ஃபியால், இந்திய அளவில் 3 ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்ற 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் (பிப்ரவரி 10) முடிந்தன. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்புத் தளத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கிளம்பினார் விஜய்.
முன்னதாக, நேற்று (பிப்ரவரி 9) விஜய் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும் திரளான கூட்டம் இருந்தது. பலர் குடும்பத்துடனும் வந்திருந்தார்கள்.
அப்போது அங்கிருந்த வேன் மீது ஏறி, ரசிகர்களை நோக்கிக் கையசைத்தார் விஜய். அப்போது கூட்டத்தைப் பார்த்து தனது மொபைலில் செல்ஃபி ஒன்றை எடுத்தார். இந்த செல்ஃபி புகைப்படத்தைத் தனது அலுவலகம் சார்பாக இயங்கி வரும் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். அத்துடன் 'நன்றி நெய்வேலி' எனவும் பதிவிட்டார்.
இந்த செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி திரையுலகினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செல்ஃபி வெளியிடப்பட்ட ஒரு மணிநேரத்தில் 36,000 பேர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். 77,000 பேர் லைக் செய்துள்ளனர். பலரும் இந்த செல்ஃபியை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதனால், இந்திய அளவில் #ThalapathyVIJAYselfie என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 2-ம் இடத்தில் #ThalapathySelfie என்ற ஹேஷ்டேகும், 3-ம் இடத்தில் #Master என்ற ஹேஷ்டேகும் தொடர்ச்சியாக ட்ரெண்டாகி வருகின்றன. விஜய் வெளியிட்ட ஒரே ஒரு செல்ஃபிதான் தற்போதைய ட்விட்டர் பேச்சாக இருக்கிறது.
தவறவிடாதீர்
நெய்வேலி படப்பிடிப்பு நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய்
தான் எடுத்த செல்ஃபியை வெளியிட்டார் விஜய்
பிரபு சாலமனின் 'காடன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: ஏ.ஆர்.ரஹ்மான் யோசனை
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago