‘மாஸ்டர்’ படத்துக்கு முன்பாகவே விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் முன்பே இதன் அனைத்து உரிமைகளும் சேர்ந்து 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை, ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். அதற்கு முன்பே விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’. பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் பெ.விருமாண்டி, இந்தப் படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்போது, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடிவடையாததால், படத்தை வெளியிட முடியவில்லை. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...
திரைத்துறை 'ஒத்த செருப்பு' படத்தைக் கொண்டாடியிருக்க வேண்டும்: பார்த்திபன்
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago