அதர்வா ஜோடியாக வாணி போஜன்

By செய்திப்பிரிவு

அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். சன் டிவியில் 6 வருடங்களாக ஒளிபரப்பாகிய ‘தெய்வ மகள்’ சீரியல், தமிழ்நாட்டின் எல்லா வீடுகளிலும் இவரைத் தெரிந்த முகமாக்கியது. பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றார்.

பின்னர், ‘மீகு மாத்ரமே செப்தா’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை விஜய் தேவரகொண்டா தயாரித்தார். தொடர்ந்து, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 14-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

மேலும், வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் சார்லஸ் இயக்கியுள்ள ‘லாக்கப்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் இயக்கவுள்ள இந்தப் படத்தை, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

மார்ச் மாதம் லண்டனில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் தளபதி பேச்சுக்காகக் காத்திருக்கிறேன்: மலையாள நடிகர் ட்வீட்

‘ஆதித்ய வர்மா’வில் நடித்த விக்ரம்: த்ருவ் விக்ரம் வெளியிட்ட வீடியோ

விநியோகஸ்தர்கள் நடிக்கவா வந்துள்ளனர்? - ‘தர்பார்’ நஷ்டம் குறித்து டி.ராஜேந்தர் காட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்