‘ஆதித்ய வர்மா’வில் விக்ரம் நடித்த காட்சியை வெளியிட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் த்ருவ் விக்ரம்.
த்ருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான படம் ‘ஆதித்ய வர்மா’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் இது. கிரிசாயா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக பனிடா சாந்து நடித்தார். ராஜா, ப்ரியா ஆனந்த், தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை, விவேக் ஹர்ஷன் எடிட் செய்தார். முதலில் இந்தப் படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்க, அதில் திருப்தி இல்லாததால், மறுபடி கிரிசாயா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் (2018) நவம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது.
இந்நிலையில், ‘ஆதித்யா வர்மா’ படத்தில் விக்ரம் நடித்த காட்சியைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ‘மறக்கவே முடியாத ஷாட்’ என்று குறிப்பிட்டுள்ளார் த்ருவ் விக்ரம். அந்தக் காட்சியில், ‘உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க’ என த்ருவ் விக்ரமிடம் ஆங்கிலத்தில் கூறுகிறார் விக்ரம். ‘யார்?’ என த்ருவ் கேட்க, ‘தெரியவில்லை’ எனச் சொல்கிறார் விக்ரம்.
படத்தில் இந்தக் காட்சி, ‘தூரம்’ என்ற பாடலில் இடம்பெறுகிறது. மேற்படிப்புக்காக இமாச்சலப் பிரதேசம் சென்ற த்ருவ்வைத் தேடிக்கொண்டு பனிடா சாந்து அவர் கல்லூரிக்கு வரும் காட்சி இது. ஆனால், அதில் விக்ரமின் முகம் இடம்பெறவில்லை.
தற்போது, விக்ரம் முகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் ரசிகர்கள்.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...
‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் தளபதி பேச்சுக்காகக் காத்திருக்கிறேன்: மலையாள நடிகர் ட்வீட்
விநியோகஸ்தர்கள் நடிக்கவா வந்துள்ளனர்? - ‘தர்பார்’ நஷ்டம் குறித்து டி.ராஜேந்தர் காட்டம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago