எதிர்ப்புக் குரல்கள் அடக்கப்படுகின்றன என்று விஜய்க்கு ஆதரவாக கேரள எம்எல்ஏ பதிவிட்டுள்ளார்.
நேற்று (பிப்ரவரி 5) காலையிலிருந்து 'பிகில்' படம் சம்பந்தப்பட்ட அனைவரின் வீட்டிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்தச் சோதனை பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, விஜய் வீடு என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் விஜய் இருக்கும்போது, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து விஜய் வீடு, அலுவலகம் எனத் தொடங்கிய சோதனை தற்போது வரை முடியவில்லை.
இந்தச் சோதனை தொடர்பாக பல்வேறு கருத்துகள் உலகி வருகின்றன. ட்விட்டர் தளத்தில் #WeStandWithVijay என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே அரசியல் வட்டாரத்தில் முதல் நபராக விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் கேரள எம்எல்ஏ.
கேரளாவில் உள்ள நிலாம்பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.வி.அன்வர். இவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "வரலாற்றைப் புரட்டிப் போடும், எதிர்க் குரல்கள் அடக்கப்படுகின்றன. நிலைப்பாடுகளை அறிவித்த நாள் முதல் அவர்கள் வேட்டையாடத் தொடங்கினர். 'மெர்சல்' திரைப்படம் திராவிட மண்ணில் பாஜகவின் வளர்ச்சிக்குத் தடையானது என்பது தெளிவு. சி.ஜோசப் விஜய்க்கு ஆதரவு” என்று தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்:
மூன்றே மாதங்களில் சாதனை படைத்த ‘டிஸ்னி+’
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago