ஜிலேபியும், முறுக்கும் போல!- ‘அன்புடன் குஷி’ நாயகன் ப்ரஜன் உற்சாகம்

By இ-பேப்பர்

மஹா

விஜய் தொலைக்காட்சியில் காதல், காமெடி, ஆக்‌ஷன் என கலகலப்பான தொடராக ஒளிபரப்பாக உள்ளது ‘அன்புடன் குஷி’. இத்தொடருக்காக குத்துச்சண்டை பயிற்சி, உடல் எடை ஏற்றம் என வித்தியாசமாக மாறியிருக்கிறார் ப்ரஜன். அதில் நடிக்கும் அனுபவம் குறித்து பகிர்கிறார்..

அது என்ன ‘அன்புடன் குஷி’?

வடசென்னை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட இளைஞன் அன்பு. மாடலிங், ஆடை வடிவமைப்புத் துறையில் ஆர்வம் கொண்ட பணக்கார பெண் குஷி. அன்புவுடன் குஷியின் காதல் கதைதான் ‘அன்புடன் குஷி’. ஜிலேபி போன்ற ஒரு பெண்ணுக்கும், முறுக்கு, தேன்மிட்டாய் போன்ற வடசென்னை பையனுக்குமான காதல் சுவாரஸ்யங்கள் கொண்டது இக்கதை. அதற்குள் வடசென்னை மார்வாடி கலாச்சாரம், குத்துச்சண்டை, திரில்லர் ஆகிய விஷயங்களும் உண்டு.

வெற்றி பெற்ற திரைப்படங்களின் பின்னணியிலான கதை அமைப்பைக் கொண்டு தற்போது பல டிவி தொடர்கள் வருகிறதே?

இந்த தொடர் அப்படி அல்ல. இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக இதை கையில் எடுத்துள்ளோம். இதற்கு முன்பு நடித்த ‘சின்னத்தம்பி’ தொடரில் வேட்டி, துண்டு என கிராமத்து பின்னணியில் இருந்தேன். அதில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு, இது ஒரு புதுமையான கதைக்களமாக இருக்கும்.

இதற்காக பிரத்யேகமாக குத்துச்சண்டை பயிற்சி எடுத்துக்கொண்டீர்களாமே?

ஆம். குத்துச்சண்டை சாதாரண விஷயம் அல்ல. எடுத்தோம், செய்தோம் என இருந்துவிட முடியாது. ரொம்ப மெனெக்கெடல் வேண்டும். பாக்ஸிங் கிளப்பில் 3 மாதங்கள் சேர்ந்து பயிற்சி பெற்றேன். சுமார் 10 கிலோ எடை ஏற்றியுள்ளேன். சின்னத்திரை தொடரின் கதை அமைப்புக்கு ஏற்ப தோற்றத்தை மாற்றி உள்ளேன். கடுமையான பயிற்சி, உத்வேகம் என ரொம்ப எனர்ஜியாக இந்த தொடர் இருக்கும்.

நடுவில் மலையாளப் படங்களி லும் கவனம் செலுத்தினீர்களே?

அது, ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாளப் படம். நல்ல வெற்றி பெற்றது. அதேபோல, தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களுக்காக காத்திருக்கேன். அதுபோல தமிழிலும் படங்கள் அமைய வேண்டும் என்பதே என் ஆசை. ‘அன்புடன் குஷி’ நல்ல கதையம்சம் கொண்ட தொடர் என்பதால், அழைத்ததும் வந்துவிட்டேன். சின்னத்திரை ரசிகர்களும் ‘அன்புடன்’ ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்