பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு; ’மன்னன்’, ‘சின்னக்கவுண்டர்’, 'சுந்தரகாண்டம்’...  7 -ல் 5 படங்களுக்கு இளையராஜா இசை!  

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

வெள்ளிக்கிழமைகளில் பல படங்கள் ரிலீசானதெல்லாம் ஒருகாலம். தீபாவளி, பொங்கல் என பண்டிகைக் காலங்களில், வெயிட்டான படங்கள் ரிலீசாகும். நீயா நானா போட்டி இருவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இருக்கும்.

அப்போதெல்லாம் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு ஆகியோர் முதல் ஐந்தாறு இடங்களில் இருந்தார்கள். இவர்களில் மோகன், முரளி, ராமராஜன் ஆகியோரின் படங்களும் வெளியாகும்.

90களில், பொங்கலுக்கு வந்த படங்களே ஓர் உதாரணம்.


92ம் ஆண்டு, பொங்கலுக்கு நிறைய படங்கள் வந்தன. ரஜினியின் ‘மன்னன்’, ‘விஜயகாந்தின் ‘சின்னக்கவுண்டர்’, கார்த்திக்கின் ‘அமரன்’, பிரபுவின் ‘பாண்டித்துரை’, ‘சத்யராஜின் ‘ரிக்‌ஷாமாமா’, பாக்யராஜின் ‘சுந்தரகாண்டம்’, பாலுமகேந்திராவின் ‘வண்ணவண்ண பூக்கள்’ என படங்கள் வெளியாகின.

’மன்னன்’ படம் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ். பி.வாசு இயக்கினார். ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, கவுண்டமணி, விசு, மனோரமா முதலானோர் நடித்தனர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. படத்தின் பின்னணி இசையாலும் ஈர்த்திருந்தார் இளையராஜா. கதையும் சொல்லப்பட்ட திரைக்கதையும் வசனங்களும் காட்சி அமைப்புகளும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. பி.வாசுவின் இயக்கத்தால், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


கார்த்திக் நடித்த ‘அமரன்’ ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. கார்த்திக் நடிப்பு பிரமாதம். ஸ்ரீவித்யா பாடிய பாட்டு அற்புதம். படத்தின் மேக்கிங் ரசிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் பேசப்படவில்லை. ரிலீசுக்கு முன்பு பேசப்பட்ட படம், ரிலீசான பிறகு ‘டாக்’ இல்லாமல் போனது.

இதேநாளில், சத்யராஜ் நடித்த ‘ரிக்‌ஷா மாமா’ படத்தை பி.வாசு இயக்கினார். கெளதமி, குஷ்பு நடித்திருந்தனர். கவுண்டமணியின் காமெடி மிகப்பிரபலம். இந்தப் படத்துக்கும் இளையராஜாதான் இசை. பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

பிரபு, குஷ்பு நடித்த ‘பாண்டித்துரை’ படமும் இதே பொங்கலுக்கு வெளியானது. மனோஜ்குமார் இயக்கினார். இளையராஜா இசை, படத்துக்கு பலம் சேர்த்தது.


பாக்யராஜின் ‘சுந்தரகாண்டம்’ வெளியானது. பானுப்ரியா நடித்திருந்தார். ‘அமரன்’ படத்திலும் பானுப்ரியா நடித்தார். ‘மன்னன்’, ‘பாண்டித்துரை’, ‘ரிக்‌ஷாமாமா’ என மூன்று படங்களில் குஷ்பு நடித்தார். படத்தை வெகுவாக ரசித்தார்கள் ரசிகர்கள். படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

பாலுமகேந்திரா, பிரசாந்த், வினோதினியை வைத்து இயக்கிய ‘வண்ணவண்ண பூக்கள்’ படம் வெளியானது. பாலுமகேந்திரா படமென்றாலே, வழக்கம் போல் இளையராஜாதானே இசை. இந்தப் படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தன.

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ படம் பொங்கலுக்கு வெளியானது. விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், சலீம்கெளஸ், சத்யப்ரியா என பலரும் நடித்தனர். இதற்கும் இளையராஜாதான் இசை. படத்தின் அத்தனைப் பாடல்களும் அள்ளிக்கொண்டு போனது. எல்லாமே சூப்பர்டூப்பர் ஹிட்டு.

‘மன்னன்’, ’பாண்டித்துரை’, ‘அமரன்’, ‘ரிக்‌ஷாமாமா’, ‘சுந்தரகாண்டம்’, ‘வண்ணவண்ணபூக்கள்’, ‘சின்னகவுண்டர்’ என ஏழு படங்கள் வந்தன. இதில், ‘அமரன்’, ‘சுந்தரகாண்டம்’ படங்களைத் தவிர, மற்ற எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. எல்லாப் பாடல்களும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா.

‘மன்னன்’ ஏ மற்றும் பி சென்டர்களில் ஓடியது. ‘சின்னக்கவுண்டர்’ ஏ, பி மற்றும் சி செண்டர் என எல்லா ஏரியாக்களிலும் வசூலை அள்ளியது. ‘பாண்டித்துரை’ சுமாரான வெற்றியைத் தந்தது. ஆனாலும் முதலுக்கு எந்த சேதாரமும் இல்லை. ‘வண்ணவண்ண பூக்கள்’ படம் ஓரளவு வெற்றியைப் பெற்றது. ’ரிக்‌ஷா மாமா’ வும் நல்லதொரு வெற்றியைப் பெற்றது.

92ம் ஆண்டு, பொங்கல் ரிலீசில், ரஜினியின் ‘மன்னன்’, ‘விஜயகாந்தின் ‘சின்னக்கவுண்டர்’ என இரண்டு படங்கள் முதலிடத்தைப் பிடித்தன. இங்கே, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலும் அங்கே ‘முத்துமணி மாலை’ பாடலும் ‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’யும் இன்றைக்கும் நம் செல்போன் கலெக்‌ஷன் பாடல்களாக மனதிலும் இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்