‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை அடுத்து ‘திரவுபதி’ படத்தை இயக்கியுள்ளார் மோகன்.ஜி.
கூட்டு நிதி (Crowd Funding) முறையில் மக் களிடம் பணம் வசூலித்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரெயிலர் வெளியானது முதல், சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக ‘திரவுபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி-யை சந்தித்து பேசியதில் இருந்து:
‘திரவுபதி’ படம் சாதி, கவுரவக் கொலைக்கு ஆதரவான படம் என்ற கருத்து பரவி வருகிறதே?
இப்படத்துக்கு மூன்று பக்கம் வரவேற்பும், ஒரு பக்கம் எதிர்ப்பும் உள்ளது. அந்த ஒரு பக்க எதிர்ப்பும் படம் வந்தால் குறைந்துவிடும். ‘சாதியம்’ பெயரால் தவறுசெய்ய நினைப்போருக்கு இப்படம் நிச்சயம் கசக்கும். விழிப்புணர்வுக்கான களமாகத் தான் இப்படத்தை பார்க்க வேண் டும். சாதி பெயரால் திட்டமிட்டு தவறு செய்ய நினைப்போரும், அதை தூண்டுவோரும் மனம் மாறினால் அதுவே இப்படத்துக்கு கிடைக்கும் வெற்றி.
உங்கள் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எதிர்க்கும் நோக்கத்தில் பின்னப்பட்ட கதை என்று கூறப்படுகிறதே?
இங்கே அனைத்து சமூகத் திலும் தவறு செய்பவர்கள் இருக் கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தாக்க வேண்டும் என்பது எப்படி என் நோக்கமாக இருக் கும்? தவறுசெய்த ஒரு சிலர், இப்படம் வெளியிடப்பட்டால் நாம் சிக்கிக்கொள்வோம் என கருதுகிறார்கள்.
அவர்களுக்குத்தான் பயமாக உள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நடக்கக்கூடாது என்பதை விதைப்பதுதான் இந்தப் படத்தின் மைய நோக்கமே.
‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் வெளி வந்த பிறகுதான் இப்படத்தை எடுக்க வேண்டும் என்கிற எண் ணம் உங்களுக்கு வந்ததா? அந்தப் படங்கள் முன்வைக்கும் கருத்து களை எதிர்க்கும் படமா ‘திரவுபதி’?
நீங்கள் குறிப்பிடும் படங்கள் எல்லாம் உருவாவதற்கு முன்பே கடந்த 2013-ம் ஆண்டிலேயே நான் இந்த கதைக் களத்தை தேர்வு செய்துவிட்டேன். கிரவுடு ஃபண்டிங் முறையில் படம் எடுக்க முனைந்ததால் எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. மேற்சொன்ன படங்களை இயக் கிய படைப்பாளிகளின் பயணத் திசை வேறு. என்னுடைய பய ணத் திசை வேறு. அந்தப் படைப்பாளிகளுக்கு எதிராக நிற்க வேண்டிய அவசியம் எனக்கும், என் படத்துக்கும் இல்லை. அதை ‘திரவுபதி’ படம் பார்க்கும்போது நீங்கள் உண|ர்வீர்கள்.
டிரெயிலர் காட்சியில் வரும் வில்லன் அணிந்திருக்கும் ஆடை வடிவமைப்பு, ஒரு குறிப்பிட்ட கட்சி தலைவரை பிரதிபலித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே?
வில்லன் தொடர்பான காட்சி களை நான் கடந்த ஜூன் மாதத்தி லேயே படமாக்கிவிட்டேன். அந் தக் கட்சி தலைவரோ அதன் பிறகு தான் அது மாதிரியான உடை களை அணிந்து கூட்டங்களுக்கு செல்கிறார். அப்படியென்றால் என்ன திட்டம் என்பது எல்லோ ருக்குமே புரியுமே!
‘கவுரவக் கொலையை ஆதரிக் கும் விதமாக இப்படம் உள்ளது’ என பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதே?
இது பெண் குழந்தைகளைப் பெற்ற தகப்பன்களுக்கான படம். இப்படத்தை எதிர்க்கும் அவர்களி லும் பெண் பிள்ளைகளை பெற்ற வர்கள் இருக்கலாம். இப்படம் வந்ததும் ‘இது நமக்கான படம்’ என அவர்கள் உணர்வார்கள்.
தகப்பன்களுக்கான படம் என்கி றீர்கள். அப்படியெனில் ஏன் எந்த தயாரிப்பாளரும் இந்தப் படத்தை தயாரிக்க முன் வரவில்லை?
அப்படியில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்தே நான் கவனித்த விஷயம் இது. நல்ல கருத்தை பதிவு செய்யும்போது, அக்கருத்துக்கு மக்களின் உறுதுணை இருக்கவே செய்யும். இதற்கு முன்பு கிரவுடு ஃபண்டிங் முறையில் பணம் சேர்த்து 3 குழந்தைகளின் உயிரை காப் பாற்றியிருக்கிறேன். அந்த வழி முறையை முகநூல் வழியே பயன்படுத்தி இப்படி ஒரு படத்தை எடுக்கலாம் என்கிற எண்ணம் உருவானதால், நான் எந்த தயாரிப் பாளரையும் அணுகவே இல்லை.
மக்கள் ஆதரவும் போதுமான நிதியும் கிடைத்ததா?
நான் யாரிடமும் உதவி இயக் குநராக இருந்து சினிமாவுக்குள் வரவில்லை. ஒரு சுதந்திரமான திரைப்படைப்பாளி என்கிற அனு பவத்தை வைத்தே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தை உருவாக்கினேன். எனக்கு சினிமா மொழி தெரியும். சிறிய தொகை கிடைத்தாலும் அதைக் கொண்டு நிறைவாக இப்படத்தை எடுத்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. அந்த வகையில் கிடைத்த நிதியைக் கொண்டு முழு திருப்தியோடு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு அமைந்தால் போதும் என்கிற நடிகர்களை கொண்டு உருவாக்கியதால், அந்த நடிகர்களாலும் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.
‘திரவுபதி’ என தலைப்புக்கான காரணம் என்ன?
இப்படத்தில் திரவுபதி என்கிற பெண் எடுக்கும் சபதம்தான் கதை யின் மையப் புள்ளி. என்னுடைய குலதெய்வத்தின் பெயர் திரவுபதி. அதனால் இந்தத் தலைப்பை தேர்வு செய்தேன். திரவுபதியாக ஷீலா நடித்திருக்கிறார். மேலும் ரிஷி ரிச்சர்ட், கருணாஸ், நிசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர்.
படம் எப்போது வெளியீடு?
இப்பபடம் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்கள் வழியே பெரிய அளவில் கவனத்தை பெற்றிருப்பதால் பல்வேறு நிறுவனங்கள் வாங்கி வெளியிட முன்வந்துள்ளன. இதுவரை எவரிடமும் விற்பனை உரிமையை கொடுக்கவில்லை.
வருகிற பிப்ரவரியில் ரிலீஸ் செய்யத் திட்டம். எந்த நிறுவனம் வழியே ரிலீஸ் செய்யவுள் ளோம் என்பது விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago