‘வாலு’ படப் பிரச்சினையின் மூலம் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார்.
சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து நாளை வெளியாகிறது. இந்நிலையில் ‘பாஸ்கி டிவி’ என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவிருக்கும் பாஸ்கிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
‘வாலு’ திரைப்படம் வெளிவர தாமதமானதற்கு நீங்களும் ஒரு வகையில் காரணம் இல்லையா?
முக்கியமான காரணம் நான் தான். இங்கே என் வெற்றிக்கான எல்லா விஷயங்களையும் நான் தான் செய்ய வேண்டும். என்னை எதிர்பார்ப்பவர்களுக்கான வேலையை நான் செய்ய வேண் டும். அப்பா எனக்காக நிறைய சம்பா தித்து வைத்திருக்கிறார். நானும் சம்பாதிக்கிறேன். மற்ற யாரிடமும் நான் எதுவும் கேட்டதில்லை.
நான் சின்ன வயதில் இருந்தே வேலை பார்க்க தொடங்கியவன். ஒரு கட்டத்தில் நாம ஏன், இப்படி ஓட வேண்டும் என்ற கேள்வி எனக் குள் வந்தபோது ஆன்மிகத்துக்குள் சென்றேன். அங்கே சென்ற பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் வந்தது. மீண் டும் இங்கே வராமல் அங்கேயே இருந்திருக்கலாம். ஆனால், ‘சிம்பு பயந்துவிட்டான்’ என்று சொன்னால் என்ன செய்வது. அதனால்தான் மீண்டும் வந்தேன். அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறேன்.
‘வாலு’ படத்தின் சிக்கல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடிந்ததா?
இந்த இடைவெளியிலும், நெருக்கடியிலும் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு சம்பவம் இல்லாமல் போயிருந்தால் எனக்கு யாரெல்லாம் எதிரி என்று தெரியாம லேயே போயிருக்கும்.ஜூலை 17-ம் தேதி படம் ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் விட்டு விட்டு படம் ரிலீஸாக ஒரு வாரம் மட்டுமே இருக்கும்போது ‘வாலு’ படத்தை வெளியிடாமல் தடுக்க வேண்டும் என்று நிற்கிறார்கள். இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டுபிடித்தேன்.
சிம்பு தனுஷ் இடையே பலத்த போட்டி இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறதே?
நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாத ஒரு காலகட்டம் இருந் திருக்கிறது. அவரிடம் ஒன்றும், என்னிடம் ஒன்றும் கூறப்பட்ட சூழலும் இருந்தது. இதெல்லாம் ஆரம்ப கட்டம். அவர் 230 ரன்கள் அடித்தால் நானும் அதைப்போல் ஜெயிக்கவேண்டும் என்று நினைத் திருக்கிறேன். அதற்கு பதிலாக நீ சதமே அடிக்கக்கூடாது என்று சொல்லும் மனநிலை எனக்கு கிடையாது.
ஒரு மாதம் முழுக்க பெண்களிடம் பேசாமல் உங்களால் இருக்க முடியுமா?
முடியாது. ஏனென்றால் எனக்கு பெண்களைப் பிடிக் கும். அவர்கள் நம்முடைய எதிர்பால். பெண்கள் எப் போதும் என்னிடம் சகஜமாக பழகுகிறார்கள். நானும் அவர் களுக்கு மரியாதை கொடுப் பேன்.
‘வாலு’ திரைப்படம் வெளிவரு வதில் விஜய் உங்களுக்கு கை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீங்கள் அஜித் ரசிகராயிற்றே?
விஜய் சாருடன் நான் நெருக்கமானவன். நாங்கள் இருவருமே இளம் வயதில் சினிமாவுக்குள் வந்தவர்கள். விஜய் சார் யாரிடமும் பேசாமல் இருக்கும் இடங்களில்கூட என்னிடம் மட்டுமே பேசி யிருக்கிறார். நாங்கள் சகோதரர் களாகத்தான் பழகி வருகிறோம். நான் ஒரு அஜித் ரசிகன் என்று சொன்னதால் எனக்கு விஜய்யை பிடிக்காது என்று பலரும் அவர் களாகவே நினைத்துக்கொள் கிறார்கள். அதுதான் இங்கே பிரச்சினை. ‘ஒஸ்தி’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு விஜய் வந்தார். ‘தலைவா’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது நான் அவரிடம் பேசினேன். இப்போது ‘வாலு’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது தனக்கு நெருக்கமான விநியோகஸ் தர்களிடம் பேசி இதைத் தீர்க்கு மாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் அஜித் சார் வெளியில் வந்து பேச வேண்டும் என்பது அவசியமில்லை. அஜித் சாரை அப்பா சந்தித்தபோதுகூட, ‘இந்த பிரச்சினைக்காக கவலைப் பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து சிம்பு வந்துவிடுவார்’ என்று கூறியிருக்கிறார்.
‘வாலு’ படத்தின் தயாரிப்பாளராக நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியும் இருக்கிறார். அவர் அஜித் சாரின் நண்பர். அதனால் கூட அஜித் சார் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிம்புவின் இந்த பேட்டி www.bosskeytv.com என்ற இணையதளத்தில் இன்று மாலை 5.00 மணிமுதல் ஒளிபரப் பாகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago