‘தளபதி 64’ படத்தின் நடிகர்கள் யார்?: முழு பட்டியல்

By செய்திப்பிரிவு

‘தளபதி 64’ படத்தில் யார் யார் நடிக்கின்றனர்? என்ற முழு பட்டியல் கிடைத்துள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘பிகில்’. அட்லி இயக்கிய இந்தப் படத்தில், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, இந்துஜா, இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து, இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது ‘பிகில்’.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 64’ என்று அழைக்கப்படுகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், விஜய்யின் ஆரம்பகாலப் படங்களில் அவருக்கு நண்பனாக நடித்தவர்கள் முதற்கொண்டு, நட்சத்திர நடிகர்களும் இதில் ஒப்பந்தமாகியுள்ளனர். யார் யார் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்த முழு பட்டியல் கிடைத்துள்ளது.

சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி (நடிகர் வைபவ் சகோதரர்) என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, தற்போது புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். எனவே, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் வருகிற ஜனவரிக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்