வி.ராம்ஜி
1975ம் ஆண்டு ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலமாக ரஜினியை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் கே.பாலசந்தர். அதன் பிறகு 1978ம் ஆண்டு மூன்றே ஆண்டுகளில், ரஜினி மளமளவென வளர்ந்தார். மூன்றாவது ஆண்டான, 78ம் ஆண்டில் ரஜினிகாந்த், மொத்தம் 15 படங்களில் நடித்திருந்தார்.
75ம் ஆண்டு, இயக்குநர் கே.பாலசந்தர், ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் ரஜினியை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, 76ம் ஆண்டு, ‘மூன்று முடிச்சு’ படத்தில், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்தார். 77ம் ஆண்டு, கே.பாலசந்தரின் ‘அவர்கள்’, தேவராஜ் மோகனின் ‘கவிக்குயில்’, ‘காயத்ரி’, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என நான்கு படங்களில் நடித்தார். இதில் ‘அவர்கள்’ படத்தில், ராமநாதன் எனும் கேரக்டரில் சைக்கோத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது ரஜினிக்கு.
‘கவிக்குயில்’ படத்தில் இரண்டாவது நாயகனாக, ஸ்ரீதேவியின் அண்ணனாக நடித்தார் ரஜினி. அதேசமயம் ‘காயத்ரி’ படத்தில், நெகட்டீவ் ரோலில், ஸ்ரீதேவியின் கணவராக நடித்தார் ரஜினி. இந்த 77ம் ஆண்டில்தான், பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ படத்தில், பரட்டை எனும் கேரக்டரில் நடித்தார் ரஜினி. ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில், அருமையான கதாபாத்திரம் ரஜினிக்கு. ’கவிக்குயில்’ போலவே சிவகுமார்தான் இதிலும் நாயகன்.
78ம் ஆண்டு வந்தது. ‘பாவத்தின் சம்பளம்’ என்றொரு படம். கெஸ்ட் ரோல். ‘மாங்குடி மைனர்’ என்ற படம். விஜயகுமார்தான் ஹீரோ. ‘வணக்கத்துக்குரிய காதலியே’ என்ற படம். இதிலும் விஜயகுமார்தான் நாயகன். ‘இறைவன் கொடுத்த வரம்’ என்றொரு படம். இதிலும் அப்படித்தான்!
துரை இயக்கத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம். விஜயகுமார் ஹீரோ. இதில் இரண்டாவது நாயகன். ‘சங்கர் சலீம் சைமன்’ என்ற படம். விஜயகுமார், ரஜினி, ஜெய்கணேஷ் நடித்தார்கள். மூன்றுபேரிலும் ரஜினி சைமன் எனும் கேரக்டரில் ரொம்பவே பேசப்பட்டார்.
இயக்குநர் துரை இயக்கத்தில், விசுவின் கதை வசனத்தில், ஸ்ரீகாந்த்துடன் ‘சதுரங்கம்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ரஜினிக்கு அமைந்த ‘மதனோத்ஸவம் ரதியோடுதான்’ என்ற பாடல் செம ஹிட்டு. இதே வருடத்தில், சிவாஜிகணேசனுடன் இணைந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ என்ற படத்தில் நடித்தார்.
இந்த வருடத்தில்தான், ருத்ரய்யாவின் இயக்கத்தில், கமல், ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் நடித்தார். மூவருக்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்திலும் இதே ஜோடி இணைந்து நடித்தது. கமல்,ரஜினி, ஸ்ரீப்ரியா, ஜெய்சித்ரா நடித்தார்கள். தேவர் பிலிம்ஸின் ‘தாய் மீது சத்தியம்’ படமும் வெற்றியைத் தந்தது.
பாலசந்தரின் இயக்கத்தில், சரிதாவுடன் ‘தப்புத்தாளங்கள்’ நல்ல படம். நல்ல பெயர். ஆனால் சரியாகப் போகவில்லை. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ‘ப்ரியா’ திரைப்படம் மிகப்பிரமாண்ட வெற்றியைத் தேடி வந்தது. எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இதேபோல், ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியாவுடன் ‘பைரவி’ எனும் திரைப்படம், ரஜினிக்கு நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. இதுதான் போஸ்டர்களில், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அடையாளத்தையும் சூட்டியது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில், ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு ஆகியோருடன் நடித்த ’முள்ளும் மலரும்’ அடைந்த வெற்றியும் தாக்கமும் இன்றைக்கு வரை இருப்பது நாம் அறிந்ததுதானே!
ஆக, ரஜினியின் திரைவாழ்வில், 78ம் வருடத்தில், ரஜினி 15 படங்களில் நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
20 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago