திருச்சி மாநகரின் கொடூரமான இரவு அது. ரூ.800 கோடி மதிப்புள்ள போதைப் பொரு ளைக் கைப்பற்றி, அதைக் கடத்திய 6 பேர் கும்பலை கைதுசெய்து லாக்கப்பில் அடைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி பிஜாய் (நரேன்). திருச் சியை மையமாகக் கொண்டு இயங் கும் அந்த கும்பலில் ஊடுருவிய மறைமுக காவல் அதிகாரியின் உதவியுடன், அதன் அசைவுகளைத் தெரிந்துகொள்ளும் பிஜாய், முகம் காட்டாத அக்கும்பலின் தலை வனைப் பிடிக்க, தனது மேலதிகாரி யின் அடுத்தகட்ட உத்தரவுக்காக காத்திருக்கிறார். அந்த நேரத்தில் மேலதிகாரி கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு மது அருந்தும் காவல் அதிகாரிகள் அனைவரும் மயங்கி விழுந்து மூர்ச்சையாகின்ற னர். அவர்களது உயிரை 5 மணி நேர அவகாசத்துக்குள் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை, மது அருந்தாத பிஜாய்க்கு ஏற்படு கிறது. 10 ஆண்டுகள் சிறை வாழ்க்கை முடிந்து விடுதலையா கும் டில்லி (கார்த்தி), அதுநாள் வரை பார்த்திராத தனது 10 வயது மகளைக் காண அதே இரவில் திருச்சிக்கு வருகிறார். தனது அதிகா ரத்தைப் பயன்படுத்தி டில்லியைப் பணியவைத்து, அதிகாரிகளைக் காப்பாற்ற அவரது உதவியை நாடுகிறார் பிஜாய். இதற்கிடையில் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை அசைத் துப்பார்த்த அதிகாரிகள் குழுவை கொலைசெய்து, போதைப் பொருளை மீட்டுச் செல்ல அந்தக் குழுவில் எஞ்சியிருப்பவர் கள் அன்பு (அர்ஜுன் தாஸ்) தலைமையில் புறப்பட்டு வருகின் றனர். இரு அணியில் யாருடைய கை ஓங்கியது, டில்லி தன் மகளை பார்த்தாரா, போதைப் பொருள் கும்பலின் தலைவனைக் கண்டு பிடிக்க முடிந்ததா உள்ளிட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது கதை.
அனைத்துக் கதாபாத்திரங்க ளும் அவற்றுக்கான பின்னணி சூழல், பிரத்யேக குணங்கள் என முழுமையான வார்ப்புகளாக இருக் கின்றன. இதனாலேயே எல்லோர் மீதும் பார்வையாளர்களுக்கு அக்கறை வந்துவிடுகிறது. நல்லவர் கள் எல்லோரும் தப்பிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு பார்வையாளர்களைத் தொற்றிக் கொள்கிறது.
டில்லியின் முன்கதை என்ற பெயரில், கதை நிகழும் அந்த இரவில் இருந்து காட்சியைத் துண்டிக்காமல், அவரது வலி மிகுந்த வார்த்தைகள் வழியாக அதை அழுத்தமாகக் கூறியது விலகல் இல்லாத எதார்த்த திரைக் கதை உத்தி.
கதாநாயகி, காதல், பாடல்கள், நகைச்சுவைக் காட்சி என எதுவும் இல்லாமல், சற்றும் அலுப்பூட்டாத வகையில் இரண்டேகால் மணி நேர திரைக்கதையைத் தந்து நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர் கள் பட்டியலில் தன் இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டிருக் கிறார் லோகேஷ் கனகராஜ்.
நாயகனின் சாகசத்தையே அதிக மும் நம்பியிருக்கும் படத்தில், எவ்வளவு வெட்டு, குத்து வாங்கி னாலும் நாயகன் மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்து சண்டை போடுவ தும் எதிராளிகளைத் துவம்சம் செய்வதும் அந்தக் கதாபாத்திரத் தின் நம்பகத் தன்மையை சீர்குலைக் கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் விரவிக் கிடக்கும் தர்க்கப் பிழை களும், மிகைச் சித்தரிப்பும், திரைக் கதையின் வேகத்தில் கடந்துபோய் விடுவதால் டில்லி கதாபாத்திரத்தின் தலை தப்பிக்கிறது.
லுங்கி அணிந்துகொண்டு தாடி யும், நெற்றியில் திருநீறும், மிக அள வான நடிப்புமாக கதாபாத் திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்து கிறார் கார்த்தி. ஆக்ஷன் காட்சி களில் அவரது அபார உழைப்பு தெரிகிறது. அன்பறிவ் வடிவ மைத்த சண்டைக் காட்சிகள் பார் வையாளர்களின் ஆரவாரத்தைப் பெறுகின்றன. கார்த்திக்கு அடுத்த நிலையில் பிஜாய் ஆக வரும் நரேன், காவலர் ஜார்ஜ் ஆகியோரின் பங்களிப்பு அவ்வளவு நேர்த்தி.
சாம்.சி.எஸ் தனது பின்னணி இசை மூலம் படத்தின் விறுவிறுப் புக்கு வலுவூட்டுகிறார். ஒரு முழு இரவில் விளக்குகள் இல்லாத சாலைகளில் நடக்கும் பயணத்தை யும், இரவு நேர காவல்துறை அலுவலகம் எப்படி இருக்கும் என்ப தையும் இயன்றவரை துல்லிய மாகவும், துலக்கமாகவும் காட்சிப் படுத்தியிருக்கிறது சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு.
சிறையிலிருந்து வெளியாகி வந்தவுடன் தன் மகளைப் பார்க்க ஏங்கும் ஒருவன், சற்றும் எதிர் பாராமல் சாகசச் சுழலில் சிக்குகின்ற அந்த ஒரு கோணத்தில் மட்டும், 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் ‘கான் ஏர்’ படத்தை நினைவூட்டுகிறான் இந்தக் ‘கைதி’!
பல முனைகளில் நிகழும் ஒரு கிரைம் திரில்லர் படம், ஒரு தீர்க்க மான புள்ளியை நோக்கித் தெளி வாக முன்னேறும் திரைக்கதையால் கடைசிக் காட்சி வரை பதற்ற மாகவே வைத்திருப்பதில் பார்வை யாளர்களை கைது செய்து விடுகிறார் இந்தக் கைதி.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago