கமல் நடிப்பில் தயாராகி வரும் 'உத்தமவில்லன்' திரைப்படம், 'விஸ்வரூபம் 2' படத்திற்கு முன்னரே வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிங்குசாமி தயாரிப்பில், கமல் நடித்து வரும் படம் 'உத்தம வில்லன்'. ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
'உத்தமவில்லன்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் துருக்கி நாட்டில் பாடல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அங்கிருந்து திரும்பியவுடன் மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 10ம் தேதி 'உத்தமவில்லன்' படத்தினை வெளியிட அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து, ஜுன் ஜுலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற இருக்கிறது.
'விஸ்வரூபம் 2' படத்தினைப் பொறுத்தவரை வெளியீடு ஆஸ்கர் நிறுவனத்தின் கையில் தான் இருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் 10 நாட்களுக்கும் அதிமாக படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. இப்போதைக்கு 'திருமணம் என்கிற நிக்காஹ்' மற்றும் 'பூலோகம்' படங்களை வெளியிட்டு விட்டு, அதன் பிறகு 'விஸ்வரூபம் 2' மற்றும் 'ஐ' படத்தினை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.
இப்போதுள்ள சூழ்நிலையில் 'உத்தமவில்லன்' படத்திற்கு பின்னர் தான் 'விஸ்வரூபம் 2' வெளியாகும் என்பது உறுதி.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago