‘ஜோசப்’ தமிழ் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ்

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

பத்மகுமார் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஜோசப்’. கடந்த வருடம் (2018) நவம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. த்ரில்லர் படமான இதன் கதையை ஷஹி கபிர் எழுதினார். ஜோஜு ஜார்ஜ் இந்தப் படத்தைத் தயாரித்ததோடு, முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

அவரோடு இணைந்து திலீஷ் போத்தன், இர்ஷாத், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். இதில் நடித்த ஜோஜு ஜார்ஜுக்கு, சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

மேலும், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான கேரள அரசின் விருதும் ஜோஜு ஜார்ஜுக்கு கிடைத்தது. அத்துடன், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான கேரள அரசின் விருதும் இந்தப் படத்துக் கிடைத்தது.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இயக்குநர் பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம்தான் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். ஒரு தோற்றத்துக்காக 20 கிலோ உடல் எடை கூடும் ஆர்.கே.சுரேஷ், இன்னொரு தோற்றத்துக்காக 30 கிலோ எடையைக் குறைக்கிறார்.

மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்குகிறார். அடுத்த வருடம் (2020) மார்ச் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது தமிழ் வசனங்களை எழுதுவது உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்