‘நான் தளபதி ரசிகன்’: மனம் திறந்த துருவ் விக்ரம்

By செய்திப்பிரிவு

‘நான் தளபதி ரசிகன்’ என வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார் துருவ் விக்ரம்.

துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஆதித்யா வர்மா’. விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக் இது. முதலில் இந்தப் படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். ஆனால், அந்தப் படம் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

எனவே, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநரான சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா, மறுபடியும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘ஆதித்யா வர்மா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ரதன் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடலைப் பாடியதன் மூலம், பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார் துருவ் விக்ரம். மேலும், இந்தப் பாடலுக்கு இடையே இடம்பெற்றுள்ள ஆங்கில ராப் வரிகளையும் அவரே எழுதியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற நவம்பர் 8-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார் துருவ் விக்ரம். அங்குள்ள மாணவர்களிடம் அவர் உரையாடியபோது, ‘நீங்கள் தல ரசிகரா அல்லது தளபதி ரசிகரா?’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘நான் எப்போதுமே தளபதி ரசிகன்’ என வெளிப்படையாகப் பதில் அளித்துள்ளார் துருவ் விக்ரம்.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்