‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர், தற்போது விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘பிகில்’ மற்றும் ‘கைதி’ என இரண்டு படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவதால், அதற்கு முன்னரே ‘சங்கத்தமிழன்’ படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.
எனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தன்னுடைய டப்பிங் பணிகளை உடனடியாக முடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தத் தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள விஜய் சந்தர், விரைவில் இசை வெளியீடு என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ படத்தையும் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிட முடிவு செய்துள்ளனர். சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
இதனால், விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாகலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago