கமல்ஹாசனின் தூங்காவனம் பிரெஞ்சு படத்தின் ரீமேக்

By ஐஏஎன்எஸ்

கமல் நடித்து வரும் 'தூங்காவனம்' ப்ரெஞ்சு படமான 'ஸ்லீப்லஸ் நைட்ஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் முக்கிய வேடத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, யூகி சேது உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், "கமலின் 'தூங்காவனம்' படம் ஒரு வெளிநாட்டு படத்தின் ரீமேக்காகும். ஆனால், எந்த படத்தின் ரீமேக் என்பதை படம் வெளியாகும் முன்பு கமல் தெரிவிக்க இருக்கிறார்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

மேலும், மற்றொரு தரப்பில் இருந்து இப்படம் 'ஸ்லீப்லஸ் நைட்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரி எப்படி தனது மகனை இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தில் இருந்து காப்பாற்றினார் என்பதே 2011ம் ஆண்டு வெளியான 'ஸ்லீப்லஸ் நைட்' திரைப்படத்தின் கதையாகும்.

'தூங்காவனம்' படத்தின் கதையும் ஒரே இரவில் நடக்கும் கதை, கமல் போலீஸ் அதிகாரி என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் பணியாற்றிய கில்லஸ் கோன்செய், சில்வியன் கேபட், வெர்ஜின் அர்னாட் என்ற சண்டை இயக்குநர்கள் 'தூங்காவனம்' படத்திலும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படக்குழு ஹைதராபாத்தில் உள்ள ரிங் சாலையில் துரத்தல் காட்சி ஒன்றை படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்