எனக்கு நான்தான் போட்டி: நடிகர் சந்தானம் பேட்டி

காமெடி நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் ‘வல்ல வனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துக் கான பத்திரிகையாளர் சந்திப்பு ஞாயிற் றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம், படத்தின் இயக்குர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த் விபில் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் கூறியதாவது:

காமெடி, ஹீரோ எது கஷ்டம்?

ஹீரோதான் ரொம்பவே கஷ்டம். காமெடியில் யோசிப்பது, பஞ்ச் டயலாக் மட்டும்தான் இருக்கும். நாயகனாக நடிக்கும்போது டான்ஸ், ஆக் ஷன், செண்டிமெண்ட் என்று எல்லாவற்றையும் ஆடியன்ஸ் சரியாக எதிர்பார்ப்பாங்க. நாயகன் அவதாரம் எடுக்கும்போது அதையெல்லாம் கொஞ்சமும் சொதப்பாமல் சரியாகக் கையாள வேண்டும்.

கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் யாருடைய காமெடி சிறந்தது?

அதை நீங்க எல்லோரும்தான் சொல்ல வேண்டும்

இயக்குநர் ராஜ்குமாரை நடிக்க வைத்திருக்கிறீர்களே?

பவர் ஸ்டாரைப்போல சினிமாவுக்குள் வந்ததுமே இவரையும் சரியான காமெடிக்கு பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவரும் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்கப்போகிறீர்களாமே?

டி.வி. ஷோவில் இருந்து காமெடி யனாக வந்தேன். அப்புறம் ப்ரொடக்‌ ஷன் கம்பெனி தொடங்கினேன். அதன்பின் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. அடுத்து இயக்குநர் ஆக வேண்டும் என்றாலும் நிச்சயம் அதையும் செய்வேன். எப்படியோ சினிமாவில் பயணிக்க வேண்டும்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவர்களில் உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார்?

இவங்க எல்லோருமே எனக்கு அண்ணன்கள்தான். என்னைவிட கொஞ்சம் சீனியர்ஸ் என்பதால் அவர்களை அண்ணன்களாகவே நினைக்கிறேன். இளம் ஹீரோக்கள் ஆர்யா, ஜீவா, சிம்பு, உதயநிதி என்று பலரும் நான் நாயகனாகப்போகிறேன் என்றதும் டான்ஸ், ஹேர் ஸ்டைல், சண்டை வரைக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தார்கள்.

உங்களுக்கு போட்டி யார்?

எப்போ நான் ஓ.பி. அடிக்க ஆரம்பிக்கிறேனோ அப்போ ரசிகர்களே என்னை ஓரங்கட்டிவிடுவார்கள். உழைக்கும் வரை நான் நம்பர் ஒன். வாழ்க்கையில் எப்பவும் உழைத்துக் கொண்டே இருக்கவே சிலர் விரும்பு வார்கள். அப்படித்தான் நானும். எனக்கு நான் தான் போட்டி.

வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என்று காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசை கட்டி வருகிறதே?

இப்போ குழந்தைகளுக்கு விடு முறை காலம். குழந்தைகள் கொண்டாடும் நேரத்தில் காமெடி படங்கள் தொடர்ந்து வருவது நல்லது தானே. இவ்வாறு சந்தானம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE