வெறும் பொழுதுபோக்கு மட்டுமே கூடாது, நடிகை கதாபாத்திரத்தில் தனித்துவம் வேண்டும்: மியா ஜார்ஜ் சிறப்பு பேட்டி

‘‘அமரகாவியம் படத்தில் ரொம்பவும் குழந்தைத்தனமும் சோகமும் கலந்த பாத்திரத்தில் பார்த்திருப்பீர்கள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் மிகவும் மாறுபட்ட வேடம். நாயகனுக்கு வேலை கிடைக்க துணைபுரியும் காதலி வேடம். ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் கண்டிப்பாக இந்தப் படத்தில் இருக்க மாட் டாள்’’ என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் மியா ஜார்ஜ். இனி அவருடன்..

பிறந்தது மும்பை, வளர்ந்தது கேரளா. தமிழில் 2-வது படத்திலேயே இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே. யார் கற்றுக் கொடுத்தது?

என் இரண்டு பட நாயகர்களும்தான். இப்படத்தில் 35 நாட்கள் நடித்தேன். ‘அமரகாவியம்’ படத்தில் 70 நாட்கள் நடித்தேன். இப்போது பேசுகிற தமிழ்கூட என் முதல் படத்தில் பேசவில்லை. அப்போது நான் முழு மலையாளி. ‘அமரகாவியம்’ படப்பிடிப்பு நாட்களில் சத்யாதான் எனக்கு பேச்சுத் துணை. அவருக்கும் மலையாளம் தெரியும். அவருடன் மலையாளத்தில் பேசி, நட்பாகி நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

‘இன்று நேற்று நாளை’ படம் பற்றி..

இது டைம் மெஷினை மையப்படுத்திய கதை. இதுவரை தமிழ் சினிமாவில் இந்த பாணியில் படம் வந்ததில்லை. இயக்குநர் கதை சொன்னது ரொம்ப பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டேன். முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்தபோதுதான் நாயகன் விஷ்ணுவை சந்தித்தேன். அற்புதமான மனிதர். வசனங்கள் எல்லாம் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

எந்த மாதிரியான பாத்திரங்கள் பிடிக்கும்?

அது படத்தின் கதையைப் பொறுத் தது. அந்தக் கதையில் என் கதா பாத்திரம் பிடித்திருந்தால் உடனே ஒப்புக்கொள்வேன். நடிகையின் பாத்திரம் வெறும் பொழுதுபோக்குக்காக இருக் கக்கூடாது. கதையில் தனித்துவமாகத் தெரிந்தால், எந்த பாத்திரம் ஏற்கவும் தயார்.

கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு வந்தால்?

கவர்ச்சியாக நடிப்பதில் இஷ்டம் இல்லை. அதிலும் குறைவான உடைகள் எல்லாம் எனக்கு செட்டாகாது. இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கில் தலா 2 படங்கள் நடித்துள்ளேன். எதிலுமே கவர்ச்சியாக நடித்ததில்லை. என் மனதுக்கு பிடித்த பாத்திரத்தில் நடிப்பதுதான் பிடிக்கும்.

நடிகைகளில் உங்களுக்கு நெருக்கமான தோழி யார்?

கண்டிப்பாக பாவனாதான். எனக்கு ரொம்ப நெருக்கமான தோழி அவர். விழாக்களில் அறிமுகமாகி இப் போது நட்பாகிவிட்டோம். தமிழில் இப்போதுதானே 2-வது படம் நடிக் கிறேன். இந்த 2 படங்களிலும் வேறு எந்த நடிகையுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதற்கு வாய்ப்பு கிடைத்தால், எல்லாருமே தோழிகள்தான்.

ஆர்யா தயாரிப்பில் நடித்தீர்களே. பிரியாணி கொடுத்தாரா?

ஆர்யா பிரியாணி கொடுப்பாரா? எனக்கு எதுவும் தரவில்லையே. ‘அமர காவியம்’ பட வேலைகள் ஆரம்பித்து, இசை வெளியீடு வரை ஆர்யா ஒருநாள்கூட படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததே இல்லை. இசை வெளியீட்டு விழாவில்தான் அவரையே பார்த்தேன்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள்?

வெறித்தனமாக டி.வி பார்ப்பேன். இசை ரொம்ப பிடிக்கும். நடிப்பு என் பதை தாண்டி, எனக்கு மிகவும் பிடித்தது இசை மட்டுமே. நல்லா பாடுவேன்.

கல்யாணம்?

அதுக்குள்ளயா? இப்போதுதான் தமிழில் 2-வது படம் நடிக்கிறேன். கேரளாவில் நல்ல பையனாக தேடிட்டிருக்கேன். எனக்குப் பிடித்த மாதிரி இன்னும் யாரும் செட்டாகல. கிடைத்தால் சொல்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE