எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக கமாலினி முகர்ஜி: இறைவி அப்டேட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக கமாலினி முகர்ஜி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அப்படத்தைத் தொடர்ந்து தனது படத்தின் பணிகளை கவனித்து வந்தார்.

சி.வி.குமார் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கவிருக்கும் படத்துக்கு 'இறைவி' என்று தலைப்பிட்டு சென்னையில் படப்பிடிப்பு துவங்கினார்கள்.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், காளி வெங்கட், அஞ்சலி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார்கள். 'இறுதிச் சுற்று' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சிவா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

அஞ்சலியைத் தவிர மேலும் 2 நாயகிகள் இப்படத்தில் இருக்கிறார்கள். முன்னணி நடிகைகளுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். கமாலினி முகர்ஜி 'இறைவி' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE