பாகுபலியில் தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பு தந்தது சரியா?- நடிகர் சுரேஷின் கருத்தால் சர்ச்சை

'பாகுபலி'யில் தமிழ் நடிகர்களுக்கு ராஜமெளலி வாய்ப்பு தந்ததை நடிகர் சுரேஷ் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சர்ச்சை உருவெடுத்துள்ளது.

'பன்னீர் புஷ்பங்கள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சுரேஷ். அதற்கு பிறகு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருந்த சுரேஷ், 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

அப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறு வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வந்தார். 'பாகுபலி' படம் குறித்து நடிகர் சுரேஷ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கும் கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

“ராஜமௌலிக்கும், ‘பாகுபலி’ படத்திற்கும் நான் ஆதரவு தர மாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு உரிய திறமை மிக்கவர்கள் என கருதவில்லை" என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார் சுரேஷ்.

'பாகுபலி' படத்தில் நாசர், சத்யராஜ் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதனால் தமிழ் நடிகர்களுக்கு எதிராக சுரேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார் என்று சர்ச்சை தொடங்கியுள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் பலரும் சுரேஷின் ட்விட்டர் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE