ஜூலை 15-ல் நடிகர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு சரத்குமார் - நாசர் போட்டி?

ஜூலை 15ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2006ம் ஆண்டு முதல் தற்போது வரை நடிகர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் சரத்குமார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். 2006, 2009, 2012 ஆகிய மூன்று வருடங்களுமே தலைவர் பதவிக்கு சரத்குமாரை யாரும் எதிர்த்து போட்டியிடவில்லை.

இந்நிலையில் 2015ம் ஆண்டிற்கான நடிகர் சங்கத் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இம்முறை ஜூலை 15ம் தேதி "சினி மியூசிசியன் யூனியன்" வளாகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் செல்வராசன், துணை அதிகாரியாக ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியிமித்து இருக்கிறார்கள்.

சரத்குமார் கூட்டணி - விஷால் கூட்டணி நேரடி போட்டி

இம்முறை நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது. தொடர்ச்சியாக 4-வது ஆண்டாக போட்டியிட முடிவு செய்திருக்கிறார் சரத்குமார். விஷால் கூட்டணியில் இருந்து நாசர் தலைவர் பதவிக்கும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்கள். பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதால் இம்முறை தேர்தல் பயங்கர விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE