கமலின் தூங்காவனம் பர்ஸ்ட் லுக் வெளியானது

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் 'தூங்காவனம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டார். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.

இப்படத்தின் போட்டோ ஷுட் சென்னையில் நடைபெற்றது. 'தூங்காவனம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் இப்படத்துக்கு 'சீக்காட்டிராஜ்யன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் கதைப்படி 3 நாயகிகள் இருக்கிறார்கள். த்ரிஷா முக்கிய நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். மேலும், மனிஷா கொய்ராலாவிடம் படத்தில் கமல்ஹாசனின் மனைவி வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்லப்பா உள்ளிட்ட படக்குழு கலந்து கொண்டார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE