அரண்மணை 2 குழுவில் இணைந்த ஹன்சிகா

By ஸ்கிரீனன்

சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா நடிக்கவிருக்கும் 'அரண்மனை 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் 'அரண்மனை'. இப்படம் வசூலில் பெரும் வரவேற்பை பெற்றது.

'அரண்மனை' படத்தைத் தொடர்ந்து 'ஆம்பள' படத்தை இயக்கினார் சுந்தர்.சி. தற்போது மீண்டும் பேய் + காமெடி கூட்டணியில் 'அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகத்தை திட்டமிட்டு இருக்கிறார்.

இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை குஷ்பு தயாரிக்க இருக்கிறார். சித்தார்த் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

படத்தின் கதைப்படி மூன்று நாயகிகள் இருப்பது போல எழுதியிருக்கிறார் சுந்தர்.சி. த்ரிஷா தவிர மற்ற இரண்டு நாயகிகள் யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இன்னொரு நாயகியாக ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தொடர்ச்சியாக சுந்தர்.சி படங்களில் நாயகியாக நடித்து வரும் ஹன்சிகா, இப்படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE