இயக்குநர் மகேந்திரன் - இளையராஜா இணையும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்
'ஜானி', 'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' என தன் படங்களின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் நீக்காத இடத்தினை பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். நீண்ட வருடங்கள் கழித்து அரவிந்த்சாமி, கெளதமி நடித்த 'சாசனம்' படத்தினை இயக்கினார். அதன் பிறகு மீண்டும் பெரிய இடைவெளி விழுந்தது.
தற்போது மீண்டும் ஒரு படத்தினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் மகேந்திரன். இளையராஜா - மகேந்திரன் மீண்டும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் இருவரும் இணைந்து, இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவும் இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரோடு இணைந்து சிம்ரன், பிரதாப் போத்தன் நடிக்க இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago