பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் நிறைய வரவேண்டும்: நடிகை ஓவியா சிறப்பு பேட்டி

‘144’ மற்றும் த்ரிஷா, நிகிஷா பட்டேலுடன் இணைந்து நடிக்கும் படம், குஷ்பு தயாரிப்பில் வைபவ்வுடன் நடிக்கும் படம், ‘மஞ்சப் பை’ படத்தின் கன்னட ரீமேக் என்று கைநிறைய படங்களுடன் பரபரப்பாக இருக்கிறார் ஓவியா. நிற்கக்கூட நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் அவரை தொலைபேசி மூலமாக பேட்டியெடுத்தோம்.

நீங்கள் தமிழ்ப் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்?

தமிழில் எனக்கு நிறைய படங்கள் வருகிறது. ஆனால் எனக்கு ஒரு படத்தின் கதையுடன் அதில் பணியாற்றும் குழுவினரையும் பிடிக்க வேண்டும். அப்படி இரண்டும் சேர்ந்து அமைந் தால்தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள் வேன். அதனால் குறைந்த படங்களில் நடிக்கிறேன்.

முன்பெல்லாம் நான் வருடத்துக்கு 2 படங்கள் மட்டும்தான் நடித்தேன். இப்போது கொஞ்சம் மாறிவிட்டேன் 4 படங்கள் வரை நடிக் கிறேன். இப்போது நான் நடிக்கும் 4 படங்களி லும் எனக்கு வித்தியாசமான பாத்திரங்கள். நிறைய படங்களில் ஒரே மாதிரியான பாத்திரத் தில் நடிப்பதை விட, குறைவான படங்களில் வித்தியாசமான பாத்திரங்களில் நடிப்பதே எனக்குப் பிடிக்கும்.

திரைப்படங்களில் உங்களை கிளாமர் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா?

நான் கிளாமராக மட்டுமே நடிக்கவில்லையே. நிறைய கிராமத்து பாத்திரங்களிலும் நடித்திருக் கிறேன். ஒரு நடிகை என்று வந்துவிட்டால், ஒரே மாதிரியாக நடிப்பதை விட வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்கவேண்டும். அப்போது தான் சினிமாத் துறையில் நிலைக்க முடியும்.

இந்த மாதிரி வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் நான் கூறுவதில்லை. எனக்கு வருகிற, பிடித்த வேடங்களில் முழு ஈடுபாட்டோடு நடிப்பேன். அதே நேரத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு எந்தளவுக்கு கிளாமர் தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு கிளாமர் காட்டுவதில் தவறில்லை என்பது என் கருத்து.

நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங் களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதே?

தமிழில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகிலும் இப்படிதான் இருக்கிறது. நாயகனை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார் கள். சில படங்கள் மட்டுமே நாயகிகளை முன்னிலைப்படுத்தி வருகிறது. பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் நிறைய வரவேண்டும்.

தென்னிந்தியாவில் எல்லா மொழிகளிலும் நடிக்கிறீர்கள். இந்தியில் நடிக்கும் திட்டம் இருக்கிறதா?

அப்படி எந்தத் திட்டமும் இல்லை. தென்னிந்திய படங்களிலேயே எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இங்கே சந்தோஷமாக இருக்கிறேன். அதே நேரத்தில் இந்தியில் நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன்.

நடிகைகளை மையப்படுத்தி சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோக்கள், படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து தங்கள் கருத்து என்ன?

சமூக வலைதளத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க சிறு வயதில் இருந்தே நாம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அதுபோல் வலைதளத்தை எப்படி பயன் படுத்துவது என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஒரு ஹோட்டலுக்கு போய் தங்குகிறோம். சில சமூக விரோதிகள் அங்கு கேமராவை ஒளித்து வைத்து வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒவ்வொரு முறையும் எங்கு கேமரா இருக்கிறது என்று தேட முடியுமா? இந்த சமூகம் மாறினால் மட்டுமே இவை எல்லாம் மாறும்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE