தனது நடிப்பில் வெளியான '36 வயதினிலே' படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்திருக்கிறார்.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா, ரகுமான் ஆகியோர் நடிப்பில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கிறார். சூர்யா தயாரித்திருந்தார்.
மே 15ம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில் ஜோதிகா கூறியிருப்பது, "’36 வயதினிலே’ திரைப்படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பும், மரியாதையும் என்னை நெகிழ வைத்துள்ளது. இத்திரைப்படம் எனக்குமட்டுமல்ல, சூர்யா, இயக்குநர் ரோஷன் என அனைவருக்கும் மறக்கமுடியாது வரவேற்பை அளித்துள்ளது.
இப்பட வாய்ப்பு என் கதவுகளை தட்டியபோது அதை நான் வரவேற்று ஏற்றுக் கொண்டேன். அதற்குக் காரணம் இல்லத்தரசிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் பல்வேறு பணிகளை ஒரு சேர செய்கின்றனர் என்ற நெருப்பு என்னுள் எப்போதுமே இருந்தது. அதன் காரணமாகவே, நான் இப்படத்தில் நடித்தேன். ஆணாதிக்கம் மிகுந்த திரைத் துறையில் கதாநாயகிகளுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் சுயமரியாதை, நம்பிக்கை, சாதனை எல்லாம் அவள் திருமண பந்தத்தால் ஏற்படும் அந்தஸ்தில் மட்டும் இல்லை. மாறாக அவள் அவளது கனவுகளை எப்படி மெய்ப்படவைக்கிறாள் என்பதிலேயே உள்ளது.
’36 வயதினிலே’ திரைப்படத்துக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவால் நான் இன்று பெருமிதம் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த நீங்கள் அனைவரும் மகளிர் மேம்பாட்டுக்கு வித்திடும், மகளிர் சுயமுன்னேற்றத்தை கொண்டாடுபவர்களாவீர். நிறைய வசந்திகள் தங்கள் கனவுகளை கைப்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.
ஜோதிகாவின் இந்த அறிக்கையை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago