'ஜக்குபாய்' வெளியாகி 4 வருடங்களுக்கு பிறகு, ஏ.வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் சரத்குமார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார்,ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் 'ஜக்குபாய்'. அதற்கு பிறகு சரத்குமார் நாயகனாக நடிக்கவில்லை. 'காஞ்சனா', 'சென்னையில் ஒரு நாள்', 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்களில் முக்கிய பாத்திரத்தில் மட்டுமே நடித்தார்.
தற்போது மீண்டும் நாயகனாக நடிக்க இருக்கிறார் சரத்குமார். ஏ.வெங்கடேஷ் இயக்கும் 'சண்டமாருதம்' படத்தில் வில்லன், ஹீரோ என இரு வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை மே 14ம் தேதி காலை மயிலாப்பூரில் நடைபெற்றது.
இப்படத்தின் கதையை சரத்குமார் எழுத, திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஏற்று இருக்கிறார். ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, கன்னட நடிகர் அருண்சாகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ், "புயல், சூறாவளியைத் தாண்டி அசுரவேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்று குறிப்பிடுவார்கள். படத்தில் சரத்குமாருக்கு அப்படி ஒரு கேரக்டர். வில்லன் கேரக்டரும் படு பயங்கரமாக இருக்கும். பக்கா ஆக்ஷன் படம்தான். ஆனால் இதுவரை யாரும் சொல்லப்படாத கதை களத்தில் சொல்லப்படாத கதையை சொல்லப்போகிறோம். ’எதிரியை பார்த்து பழக்கமில்லை எரிச்சுதான் பழக்கம்’ என்பது வில்லன் சரத்குமாரின் பாலிசி. ’எதிரியை எரிப்பது மட்டுமல்ல சாம்பாலாக்கித்தான் பழக்கம்’ என்பது ஹீரோ சரத்குமாரின் பாலிசி. இவர்கள் இருவரின் மோதல்தான் சண்டமாருதம்" என்றார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago