நடிகராக இருந்து இயக்குநராக மாறியுள்ள நாகேந்திரன், தற்போது கூலிப்படையை அடிப்படையாக வைத்து ‘காவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விமல், ‘புன்னகை பூ’ கீதா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்த நாகேந்திரனை சந்தித்தோம்.
கூலிப்படையைப் பற்றி ஒரு படத்தை இயக்க காரணம் என்ன?
தமிழகத்தில் நடக்கும் கொலை களில் கூலிப்படைகளால் நடத்தப் படும் கொலைகள்தான் அதிகமாக இருக்கிறது. கூலிப்படை கொலை கள்தான் இன்று தமிழகத்தில் புற்றுநோய் போல் பரவிக் கிடக்கிறது. அதனால்தான் அதை மையமாக வைத்து இப்படத்தை இயக்குகிறேன்.
அதே நேரத்தில் முழுக்க முழுக்க கருத்து சொல்கிற படமாகவும் இது அமைந்துவிடாது. கமர்ஷியல் விஷயங்களையும் கலந்து சொல்லியிருக்கிறேன்.
‘சரோஜா’ படத்துக்கு பிறகு ஏன் நடிப்பதை நிறுத்திவிட்டீர்கள்?
நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். படிக்கும்போதே நிறைய படங்களில் உதவி இயக் குநராக வேலை பார்த்தேன். சினிமாத்துறையில் இருக்கும் பெரிய நடிகர்கள் உட்பட பல ருடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சிலர் நடிக்க கூப்பிட்டார்கள். அப்படித் தான் நான் ‘சரோஜா’ படத்தில் நடித் தேன். ஆனால் என் ஆசை யெல்லாம் ஒரு இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான். அதற்காக சுசி கணேசனிடம் முழுநேர உதவி இயக்குநராக பணியாற்றினேன். சீமானிடமும் சில நாட்கள் பணியாற்றினேன்.
பெரிய நடிகர்கள் பலருடன் உங் களுக்கு நல்ல பழக்கம் இருப் பதாக சொல்கிறீர்கள். அவர் களை வைத்து ஏன் படம் இயக்கவில்லை?
நட்பு வேறு, சினிமா வேறு. சினிமாவையும், நட்பையும் சேர்க் கக்கூடாது. அப்படி சேர்த்தால் நாம் தான் ஏமாளி ஆகிவிடுவோம். ‘கந்தசாமி’ படத்தில் பணியாற்றியபோது விக்ரம் எனக்கு நண்பர் தான். அதற்காக விக்ரமிடம் போய் ஒரு கதை சொன்னால் அவர் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்க கூடாது.
பெரிய நடிகர்கள் எப்போதுமே வெற்றி பெற்ற இயக்குநர்களோடுதான் படம் பண்ண விரும்புவார்கள். அதனாலேயே நான் யாரிடமும் போய் நிற்கவில்லை. என்னு டைய கதைக்கு விமல் பொருத்த மானவராக இருப்பார் என்பதால் அவரை வைத்து இப்படத்தை எடுத்தேன். என்னுடைய அடுத்த படத்தை இரண்டு பெரிய நடிகர் களை வைத்து இயக்கவுள்ளேன்.
சீமான் மற்றும் சுசி கணேசனிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
என் அண்ணன் சீமானிடம் இருந்து சினிமா சம்பந்தமாக எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை. யார் வந்து என்னிடம் வேலை சொன்னாலும், ‘டேய் தம்பிகிட்ட அந்த வேலையைச் சொல்லாதீங்க. அவன் சின்ன பையன்’ என்று சொல்லிவிடுவார். அவர் என்னை உதவி இயக்கு நராக பார்க்கவில்லை, தம்பியாகத் தான் பார்த்தார்.
அனைவரிடமும் அன்பாக இருக்கவேண்டும், எந்த தொழில் செய்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்கவேண்டும் என்பதுபோன்ற விஷயங்களை சீமானிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
இயக்குநர் சுசி கணேசனிடம் இருந்துதான் முழுமையாக சினிமாவை கற்றுக் கொண்டேன். ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ மற்றும் அவர் இயக்கிய இந்திப் படத்திலும் நான் பணி யாற்றியுள்ளேன். அடுத்து அவர் எடுக்கவுள்ள படத்திலும் வேலை பார்ப்பேன்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவரிடம் உதவி இயக்குநராக இருப்பேன். ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும், படப்பிடிப்பை எப்படி நடத்த வேண்டும் இப்படி நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். எனக்கு தெரிந்த மிகச்சிறந்த இயக்குநர் - சுசி கணேசன்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago