விஷாலுடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை: சரத்குமார் விளக்கம்

நடிகர் விஷாலுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதம் எதுவுமே இல்லை என்று நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரு மான சரத்குமார் கூறினார்.

கட்சி நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்பதற் காக நேற்று திருச்சி வந்த சரத்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் விஷாலுக்கும், எனக் கும் தனிப்பட்ட முறையில் விரோதம் கிடையாது. நடிகர் சங்க விஷயத்தில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. சங்க நடவடிக் கைகளை பொதுஇடத்தில் விவாதிப்பது சரியல்ல. நடிகர் சங்கத் தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். அவரும் தாரா ளமாக போட்டியிடலாம்.

வரும் சட்டப்பேரவைத் தேர் தலிலும் அதிமுக-வுடன் கூட்டணி தொடரும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற் கொள்வேன். அங்கு அதிமுக அமோக வெற்றிபெறும். அந்த தொகுதியில் போட்டியிட டிராபிக் ராமசாமிக்கும் உரிமை உள்ளது என்றார் சரத்குமார்.

“1996-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் ஜெய லலிதா முதல்வராகப் பதவியேற்ற விழாவில் கலந்துகொண்டாரே” என்று கேட்டதற்கு, “அப்போதைய சூழ்நிலை வேறு. தற்போது அவரது மனதில் மாற்றம் ஏற்பட் டிருக்கலாம்” என்றார் சரத்குமார்.

பின்னர் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசும்போது, “கட்சி யினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். மற்ற கட்சி களைக் காட்டிலும் நம் கட்சியில் தான் அறிவும், ஆற்றலும் கொண்ட வர்கள் அதிகம் உள்ளனர். மக்களிடம் நம்மை அடையாளப் படுத்தும்விதமாக நல்ல பணிகளை மேற்கொள்ள வேண் டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE