டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பலரும் வேலையிழப்பது வருத்தமளிக்கிறது: ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் நேர்காணல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமான வர் கோபி ஜெகதீஸ்வரன். ‘யுவன் யுவதி’, ‘என்னமோ ஏதோ’, ‘வா டீல்’ என்று பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற் றிய அவர், தற்போது ‘இனிமே இப்படித் தான்’ படத்தில் பணியாற்றி வருகிறார். ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்படி வந்தது?

நான் 9-ம் வகுப்பு முடித்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்துவிட்டேன். 10-ம் வகுப்பை டூட்டோரி யலில்தான் படித்தேன். இரண்டு மணி நேரம்தான் படிப்பு, மற்ற நேரங்களில் வேலை பார்ப்பேன். 1992-ல் இருந்து கல் யாணத்துக்கு வீடியோ எடுக்கும் குழுவில் இருந்தேன். முதலில் லைட்மேன், பிறகு போட்டோகிராபர் என்று முன்னேறினேன். அதற்கும் மேல் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சினிமா ஒளிப்பதிவாளராக லாம் என்று தோன்றியது.

யாரிடம் இருந்து ஒளிப்பதிவைக் கற்றுக் கொண்டீர்கள்?

நான் ஒளிப்பதிவாளர் பாலசுப்பி ரமணியெம் சாரிடம் ‘வாட்டாக்குடி இரணி யன்’ படத்திலிருந்து உதவியாளராக பணி யாற்றினேன். அவரிடம் இருந்துதான் ஒளிப்பதிவு செய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டேன்.

நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஒளிப்பதிவு செய்த காட்சி எது?

‘வா டீல்’ படத்தில் ‘பேசி பேசி’ என்ற ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக பாங்காக் தீவுக்குச் சென்றோம். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் உருவாகி இருந்ததால் கடல் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டது. வெயில் அடித்துக் கொண்டிருக் கும், ஆனால் அதே நேரத்தில் கடல் கொந் தளித்துக் கொண்டு இருக்கும். படப் பிடிப்புக்காக படகில் கடலுக்குள் ஒரு இடத்துக்கு சென்றோம். ஆனால், கடல் கொந்தளிப்பு காரணமாக எங்களால் இறங்க முடியவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என்று நான் கடலுக்குள் இறங்கிவிட்டேன். எல்லாப் பொருட்களையும் தலையில் வைத்துக் கொண்டு கரையில் கொண்டு போய் இறக்கினேன். மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் காட்சியை இயக்கினோம்.

‘இனிமே இப்படித்தான்’ படத்தில் சந்தானத் துடன் பணியாற்றிய அனுபவம் எப்படி?

சந்தானம் சாருடன் பணியாற்றுவது எப்போதும் சந்தோஷமாக இருக்கும். பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் நாம் சொல்லும் இடத்தில் நின்று நடிப்பார். அவர் ஒரு நல்ல நடிகர் என்பதுடன் நல்ல மனிதரும்கூட.

இப்போது ஒளிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித் துள்ளதே?

நான் மூன்று படங்களை பிலிமில் பண்ணியிருக்கிறேன். அதில் ‘வா டீல்’ படம்தான் ஃபிலிமில் பண்ணிய கடைசி படம். ஃபிலிமில் நீங்கள் பணியாற்றிவிட்டால் மற்ற எதில் வேண்டுமானாலும் எளிதாக பணியாற்றிவிடலாம். டிஜிட்டல் என்பது ஒரு கருவி. அதில் புதுப் புது விஷயங் கள் வந்துகொண்டே இருக்கும். அவ்வளவு தானே தவிர வேறு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. ஃபிலிமில் ஒரு படத்தை எடுத் தால் அதை 100 பேர் சேர்ந்து படமாக மாற்று வார்கள். டிஜிட்டல்மயமான பிறகு அதைப் படமாக்க இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால் போதும். இதனால் பலரும் வேலை இழப்பதுதான் வருத்தமான விஷயம்.

உங்களுக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதி வாளர் யார்?

பி.சி.ஸ்ரீராம். அவர்தான் முதல் முறை யாக ‘வானம் வசப்படும்’ படத்தில் டிஜிட் டல் தொழில் நுட்பத்தில் பணியாற்றினார். ஒளிப் பதிவில் எந்த ஒரு புதிய விஷயம் வந்தாலும், உடனே பரிசோதனை பண்ணிப் பார்த்துவிடுவார். ‘ஐ’, ‘ஓ காதல் கண்மணி’ என்று வித்தியாசமான படங்களில் பணி யாற்றி எப்போதுமே தன்னை அப்டேட்டி லேயே வைத்திருக்கிறார். அவரிடம் எப்போ தும் தேடல் அதிகமாக இருக்கும். அவரைப் பார்த்துதான் நாங்கள் புத்துணர்ச்சியை ஏற்றிக்கொள்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE