செப்.17-ல் விஷாலின் பாயும் புலி ரிலீஸ்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடிக்கும் 'பாயும் புலி' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ல் ரிலீஸ் ஆகிறது. இதை விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'பாண்டிய நாடு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசீந்திரன் - விஷால் கூட்டணி 'பாயும் புலி' திரைப்படத்தில் இணைந்துள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி விஷாலுக்கு மூத்த சகோதரராக நடிக்கிறார்.

பெங்களூருவைச் சார்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார். சூரி, ஆனந்த் ராஜ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேந்தர் மூவிஸ் மதன் இப்படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் ஏற்கெனவே 'பாயும் புலி' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏவிஎம் நிறுவனத்தின் தடையில்லா சான்று அனுமதி பெற்றே, விஷால் தன் படத்துக்கு 'பாயும் புலி' என்று டைட்டில் வைத்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ல் 'பாயும் புலி' திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று விஷால் அறிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE