இயக்குநர் எழிலிடம் ‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்கு ராஜா’ ஆகிய படங்களில் பணியாற்றியவர் என்.ராஜசேகர். தற்போது விமல், அஞ்சலி, சூரி ஆகியோர் நடிக்கும் ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்:
காமெடி கலந்த கமர்ஷியல் படங்கள்தான் இப்போதைய டிரண்டாக இருக்கிறது. உங்கள் முதல் படத்திலேயே இந்த டிரண்டைப் பிடித்துக்கொண்டீர்களே?
டிரண்ட் என்றெல்லாம் எதுவும் இல்லை. எல்லா காலத்திலும் எல்லாவிதமான படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ வந்த காலகட்டத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ரிலீஸ் ஆனது. இப்படி தொடர்ந்து ஆக்ஷன் படங்கள் வந்த காலத்தில் காமெடி படங்களும் வந்து ஜெயித்திருக்கிறது.
நமது படத்தின் மூலம் திரையரங்கில் ரசிகர்களை மகிழ்ச்சியாக, வைத்திருக்கிறோமா என்பதுதான் முக்கியம். காமெடிப் படங்கள் அதிகமாக வந்து பேசப்படும்போது அதே பாணியில் படம் எடுப்பதும் ஜெயிப்பதும் சவாலான விஷயம்தான். அதை மனதில் வைத்துத்தான் நாங்களும் இந்தப் படத்தை எடுத்துவருகிறோம்.
இப்படத்தில் விமலின் தோற்றம் வித்தியாசமாக இருக்கிறதே?
இந்தப் படத்துக்காக விமல் கொஞ்சம் எடையைக் கூட்டியுள்ளார். மீசை, ஹேர் ஸ்டைல் என்று எல்லாவற்றையும் மாற்றியுள்ளார். இந்தப்படத்தில் அவரது உடல்மொழியில் ஒரு தெளிவு தெரியும்.
சூழ்நிலைதான் ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை தீர்மானிக்கிறது. ஒருவர் பிரச்சினையை உருவாக்கினால் அவர் வில்லன். பிரச்சினையை தீர்த்தால் அவர் ஹீரோ. இந்த இரண்டு இடங்களிலும் ஒரே நபர் நின்று விளையாடும் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்து நாயகன் விமல் வழியாக சொல்லியிருக்கிறோம்.
சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கும் அஞ்சலியின் நடிப்பு எப்படி உள்ளது?
அவருக்கு இந்தப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம். விமல் எடையை கூட்டியதுபோல இந்த படத்துக்காக அஞ்சலி கிட்டத்தட்ட 5 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
இயக்குநர் எழில் சார் ‘தேசிங்கு ராஜா’ படத்தின் வசனம் எழுதும் பொறுப்பை எனக்கு கொடுத்தார். அந்த அனுபவம் மூலம்தான் தயாரிப்பாளர் மதன் சாரை சந்தித்து இந்தக்கதையை சொல்லும் வாய்ப்பு அமைந்தது. இதற்காக முதலில் எழிலுக்கு நன்றி.
‘தேசிங்குராஜா’ படத்துக்கு எழுதிய வசனம்தான் இந்தப்பட வாய்ப்பை உங்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், இந்தப் படத்துக்கு நீங்கள் வசனம் எழுதவில்லையே?
அந்தப் படத்தைவிட இது இன்னும் சிறப்பாக வர வேண் டும் என்று நான் நினைத்ததுதான் இதற்கு காரணம். என் நண்பன் டான் அசோக்தான் இந்தப்படத்தின் வசனகர்த்தா. அதேபோல என் மற்றொரு நண்பரான பாலாஜி படத்துக்கு ஒளிப்பதிவு செய் கிறார். என் முதல் படம் இப்படி நெருங்கிய நண்பர்கள் கூட்டணியில் உருவாகிறது.
எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பணி யாற்றி வந்த நீங்கள், சினி மாவை பிரதான தொழிலாக ஆக்கிக்கொண்டது ஏன்?
என் சொந்த ஊர் காரைக் குடி. கல்லூரி படிக்கும்போது கூட சினிமா மீது ஆசை இருந்த தில்லை. முதல் நாள், முதல் காட்சி என்று ரசிகனாக எந்தப் படத்தையும் அடித்துப்பிடித்து பார்த்ததும் இல்லை. ‘உனக்கு எப்படிடா இந்த ஆசை வந்தது’ என்று இப்போதும் வீட்டில் ஆச்சரியத்தோடுதான் இருக்கிறார்கள்.
நிறைய புத்தகம் படிப்பேன். அந்த புத்தகங்கள் வழியே தான் எனக்கு எது சரியான பாதையாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன். புத்தகங்கள்தான் எனக்கான இலக்கை காட்டியது. அவை வகுத்துக்கொடுத்த பாதையில் பயணித்தேன். அந்த இடத்தை விரைவிலேயே அடைந்துவிட்டேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago