‘கொம்பன்’ பிரச்சினையில் என் பெயரை இழுப்பதா? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

‘கொம்பன்’ பட பிரச்சினையில் என் பெயரை இழுப்பது கண்டிக்கத் தக்க விஷயம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’ நிரு பரிடம் அவர் கூறியதாவது: ஒரு சமூகத்தை பெருமைப்படுத்தி படம் எடுக்கும்போது, அது இன்னொரு சமூகத்தை பாதிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ‘விருமாண்டி’ படத்தின் போது கமலுக்கு இது போன்ற பிரச்சினை ஏற்பட்டது. ‘தலைவா’ படத்தின்போது விஜய்க்கு பிரச்சினை வந்தது. இப் போது ‘கொம்பன்’ படத்துக்கும் இந்த பிரச்சினை வந்திருக்கிறது.

‘கொம்பன்’ படத்தின் ரிலீஸுக்கு நான் தடையாக இருப்பதாக சிலர் கூறிவருகிறார்கள். விளம்பரத்துக் காகத்தான் என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்பே என் படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை நான் அறிவித்துவிட்டேன். அதை 275 தியேட்டர்களில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ‘கொம்பன்’ படம் வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கப் போவ தில்லை. அதனால் இதில் என் பெயரை இழுப்பது கண்டிக்கத் தக்க விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE