கடன் விவகாரம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துகள் மீது வங்கி நடவடிக்கை

96.75 கோடி கடனை செலுத்தாததால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை கையப்படுத்தியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். 'அந்நியன்', 'தசாவதாரம்', 'அந்நியன்' உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்தவர்.

ஒரே நேரத்தில் 'ஐ', 'பூலோகம்', 'விஸ்வரூபம் 2' என மூன்று பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்ததில் கடனில் சிக்கினார். இதனால் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடன் வாங்கினார். பல்வேறு கடன் பிரச்சினைகளைத் தாண்டி தான் 'ஐ' திரைப்படம் வெளியானது.

இதுவரை கடனைச் செலுத்தாத காரணத்தால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு மற்றும் மூன்று திரையரங்குகள் ஆகியவற்றை கையப்படுத்தி இருக்கிறது இந்தியன் ஓவர்சீங் வங்கி.

இது குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 28ம் தேதி முதல் மூன்று சொத்துக்களை சுவாதீனப்படுத்தி இருக்கிறோம். சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள வீடு, வேலூரில் உள்ள திரையரங்கம் மற்றும் சேலத்தில் உள்ள சந்தோஷ், சப்னா மற்றும் சாந்தம் திரையரங்குகள் ஆகியவை இதில் அடக்கம் என்று தெரிவித்திருக்கிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.

இவருடைய தயாரிப்பில் 'விஸ்வரூபம் 2' மற்றும் 'பூலோகம்' ஆகிய படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை வங்கி கையகப்படுத்தி இருப்பது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE